என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கும் எலான்மஸ்க் இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கும் எலான்மஸ்க்](https://media.maalaimalar.com/h-upload/2024/05/19/2259139-11.webp)
X
இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கும் எலான்மஸ்க்
By
Maalaimalar19 May 2024 10:55 AM IST
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- இந்தோனேசியாவில் டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்க உள்ளார்.
- இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோவுடன் இணைந்து மஸ்க் இந்த சேவையைத் தொடங்க உள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க உள்ளார்.
இதற்காக அவர் இன்று இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்றார். பாலியின் மாகாணத் தலைநகரான டென்பசாரில் உள்ள பொது சுகாதார மருத்துவமனையில் நடைபெறும் விழாவில் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோவுடன் இணைந்து மஸ்க் இந்த சேவையைத் தொடங்க உள்ளார்.
மேலும் இந்தோனேசியாவின் சுகாதாரம், கல்வித் துறைகளில் இணைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார்.
Next Story
×
X