என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
முதல் முறை.. கார்கில் போரில் பங்கேற்றதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
- இந்தியாவுக்குள் ஊடுருவியது விடுதலை கோரும் முஜாகிதீன்கள் தான் என்று பாகிஸ்தான் கூறி வந்தது
- ராணுவ ஜெனரல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், எல்லாக்கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி சுமார் 200 கிமீ வரை ஆக்கிரமித்தனர். இந்திய நிலைகளையும் கைப்பற்றியது. இதையடுத்து இந்திய ராணுவம் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்தது. இந்த போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் 25 வது வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.
ஆனால் இந்தியாவுக்குள் ஊடுருவியது விடுதலை கோரும் முஜாகிதீன்கள் தான் என்றும் தங்களது ராணுவத்துக்கும் அந்த தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு உள்ள தொடர்பை முதல் முறையாக பாகிஸ்தான் வெளிப்படையாக பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடந்த பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசிம் முனிர் [Asim Munir], 1965, 1971 மற்றும் கார்கிலில் 1999 என பல சமயத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பாகிஸ்தானுக்காகவும், இஸ்லாத்துக்காகவும் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் கார்கில் போரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றது உறுதியாகி உள்ள நிலையில் ராணுவ ஜெனரல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Breaking: First time ever Pakistani Army accepts involvement in Kargil War; Sitting Pakistan Army Chief General Asim Munir confirms Pakistan Army involvement in Kargil War with IndiaPS: Pakistani army has never publicly acknowledged its direct role in the Kargil War, so far pic.twitter.com/VtJfsMnmv1
— Sachin (@Sachin54620442) September 7, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்