search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாராளுமன்ற தேர்தல்: இந்தியாவை பாராட்டிய ஜெர்மனி, நைஜீரியா
    X

    பாராளுமன்ற தேர்தல்: இந்தியாவை பாராட்டிய ஜெர்மனி, நைஜீரியா

    • பாராளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
    • தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.

    பெர்லின்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. நேற்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை ஜனநாயக முறைப்படி சிறப்பாக நடத்தி முடித்துள்ள இந்தியாவுக்கு ஜெர்மனி, நைஜீரிய நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக ஜெர்மன் வெளியுறவு அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலை வெற்றிகரமாக முடித்த இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும், இந்தியா உடனான நமது ஒத்துழைப்பை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளது.

    இதேபோல், நைஜீரிய வெளியுறவுத்துறை மந்திரி யூசுப் மைதாமா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்தில் உலகின் கோட்டையாக விளங்கும் இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 968 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டு, 44 நாட்கள் நீடித்த இந்த தேர்தல் வரலாற்றிலேயே மிகப் பெரியது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக நாங்கள் உங்களுடன் இணைந்து கொள்கிறோம். வெற்றிகரமான தேர்தல் காலத்திற்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×