search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேலுக்கு சவாலாக விளங்கிய ஹசன் நஸ்ரல்லா
    X

    இஸ்ரேலுக்கு சவாலாக விளங்கிய ஹசன் நஸ்ரல்லா

    • லெபனான் ராணுவத்தை விட வலிமையான ஒரு படையாக மாற்றினார்.
    • ஹிஸ்புல்லாவை அரசியல் மற்றும் ராணுவ சக்தியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

    ஹிஸ்புல்லா இயக்க தலைவராக 32 ஆண்டுகளாக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலுக்கு கடும் சவாலாக விளங்கினார்.

    1960-ம் ஆண்டு பெய்ரூட்டின் கிழக்கு போர்ஜ் ஹம்மூத் பகுதியில் பிறந்தவர். அவரது தந்தை காய்கறி கடை நடத்தி வந்தார். ஹசனின் இளமைக் காலத்தில் லெபனான் உள்நாட்டு போரில் சிக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து லெபனானை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.

    இதையடுத்து இஸ்ரேலை வீழ்த்த ஹிஸ்புல்லா இயக் கம் உருவாக்கப்பட்டது. இதில் ஹசன் நஸ்ரல்லா இணைந்தார். 1992-ம் ஆண்டு அப்போதைய ஹிஸ் புல்லா தலைவராக இருந்த அப்பாஸ் அல்-முசாவி, இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் அந்த இயக்கத்துக்கு தனது 32-வது வயதில் ஹசன் நஸ்ரல்லா தலைவரானார்.

    தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுடனான போரை நஸ்ரல்லா தொடர்ந்து முன்னின்று நடத்தினார். அங்கிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின் வாங்கியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு எதிரான முதல் அரபு வெற்றியை ஹெஸ்பொலா அடைந்து விட்டதாக நஸ்ரல்லா அறிவித்தார்.


    மத்திய கிழக்கில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஈரானுடன் நெருக்கமான தொடர்பு களைக் கொண்ட அவர் அதுமட்டுமல்லாது ஹிஸ்புல்லாவை ஒரு அரசியல் மற்றும் ராணுவ சக்தியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

    அவரது தலைமையின் கீழ், பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் மற்றும் ஈராக், ஏமனில் உள்ள போராளிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்த, ஈரானிடம் இருந்து ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளையும் பெற்றார். ஹிஸ்புல்லா இயக்கத்தை, லெபனான் ராணுவத்தை விட வலிமையான ஒரு படையாக மாற்றினார்.

    லெபனான் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஹிஸ்புல்லா இயக்கம் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    Next Story
    ×