search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    இஸ்ரேலிடம் ரகசியங்களை விற்ற ஈரான் உயர்மட்ட அதிகாரி.. முன்னாள் அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    இஸ்ரேலிடம் ரகசியங்களை விற்ற ஈரான் உயர்மட்ட அதிகாரி.. முன்னாள் அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

    • அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை சேகரிக்கவே இந்த முயற்சி.
    • மொசாட் உளவாளிகள் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

    ஈரான் புலனாய்வு அமைப்புகளில் வெளிநாட்டு உளவாளிகள் ஊடுருவியதாக ஈரான் முன்னாள் அதிபர் மகமுத் அகமதிநெஜத் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான நேர்காணலில் அவர், "ஈரான் ரகசிய அமைப்பின் தலைவர் உண்மையில் இஸ்ரேலின் தேசிய புலனாய்வு முகமையான மொசாட்-இன் ரகசிய உளவாளி," என்று தெரிவித்தார்.

    இஸ்ரேல் நடவடிக்கைகளை உளவு பார்க்க நிமயகமிக்கப்பட்ட ஈரான் பாதுகாப்பு அமைப்பின் தலைவரை மொசாட் பயன்படுத்திக் கொண்டது என்று ஈரான் முன்னாள் அதிபர் மகமுத் தெரிவித்தார். இதன் மூலம் ஈரானை சேர்ந்த கிட்டத்தட்ட 20 உளவாளிகள் இஸ்ரேலுக்கு மிக முக்கிய தகவல்களை வழங்கியுள்ளனர். ஈரானின் அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை சேகரிக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    ஈரானை இஸ்ரேல் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது முதல் முறையில்லை. முன்னதாக 2018 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஈரானின் மிக முக்கிய அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் உளவாளிகள் சேகரித்ததாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆவணங்களில், மொசாட் உளவாளிகள் தெஹ்ரானி வேர்ஹவுசுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இந்த நடவடிக்கையில், கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட உளவாளிகள் சுமார் ஆறு மணி நேரம் ஈடுபட்டனர் என்று கூறப்பட்டது. இந்த ஆவணங்களால் ஈரானின் அணு ஆயுத திட்டம் உலக அரசியலில் புயலை கிளப்பியது.

    Next Story
    ×