search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தனக்குத்தானே கருத்தடை  அறுவை சிகிச்சை செய்த டாக்டர்
    X

    தனக்குத்தானே கருத்தடை அறுவை சிகிச்சை செய்த டாக்டர்

    • வழக்கமாக இதுபோன்ற அறுவை சிகிச்சை 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும்.
    • அறுவை சிகிச்சை குறித்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரின் துணிச்சலை பாராட்டி பதிவிட்டனர்.

    குடும்ப கட்டுப்பாடு என்று வரும் போது பொதுவாக பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் தற்போதைய நவீன மருத்துவ சிகிச்சையில் ஆண்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு செய்யும் அளவுக்கு வந்து விட்டது. ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வாசக்டோமி என்று அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில் தைவானின் தைபே பகுதியை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான சென் வெய்-நாங் என்பவர் தனக்கு தானே வாசக்டோமி அறுவை சிகிச்சை செய்து கொண்டதோடு அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. 3 குழந்தைகளின் தந்தையான டாக்டர் சென் வெய்-நாங் தனது மனைவி மேலும் குழந்தைகளை பெற விரும்பவில்லை. அதோடு மனைவியை மகிழ்விப்பதற்காகவும், ஆண்களின் கருத்தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தனக்குதானே வாசக்டோமி அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறினார்.

    வழக்கமாக இதுபோன்ற அறுவை சிகிச்சை 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். ஆனால் டாக்டர் சென் வெய்-நாங் தனக்குதானே அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் சுமார் 1 மணி நேரம் எடுத்து கொண்டதாகவும், தனக்கு தானே கருத்தடை செய்து கொள்வது விசித்திரமான அனுபவமாக இருந்ததாகவும் கூறினார். அவரது அறுவை சிகிச்சை குறித்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரின் துணிச்சலை பாராட்டி பதிவிட்டனர்.

    Next Story
    ×