search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஈரான் அணுசக்தி ரகசியங்கள் திருட்டு.. இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதலால் பரபரப்பு - பேஜர்களுக்கு தடை!
    X

    ஈரான் அணுசக்தி ரகசியங்கள் திருட்டு.. இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதலால் பரபரப்பு - பேஜர்களுக்கு தடை!

    • ஈரானின் அனைத்து அரசு துறைகள் மீதும் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் முக்கிய ஆவணங்கள் திருடுபோயுள்ளன
    • எரிபொருள் விநியோகம், போக்குவரத்துக்கு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஈரான் இஸ்ரேல் இடையே போர் ஏற்படும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் மீது சைபர் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. ஈரான் அணுசக்தி நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த இந்த சைபர் தாக்குதலால் ஈரான் அரசின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஈரான் நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நீதித்துறை நிர்வாகங்களையும், அணுசக்தி, எரிசக்தி மற்றும் மின் விநியோக கட்டமைப்புகளையும் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதலால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஈரான் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முடயங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த தாக்குதல் குறித்து பேசிய ஈரான் சைபர் கவுன்சில் முன்னாள் செயலாளர் பெரோஸ்பாடி, ஈரானின் அனைத்து அரசு துறைகள் மீதும் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் முக்கிய ஆவணங்கள் திருடுபோயுள்ளன. முக்கியமாக ஈரான் அணுசக்தி மையங்களின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன. எரிபொருள் விநியோகம், போக்குவரத்துக்கு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம், துறைமுகங்கள் என அனைத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகத் தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் தற்போது ஈரான் அரசு நிர்வாகங்கள் மீதே நடந்துள்ள இந்த சைபர் தாக்குதல் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்டவற்றை எடுத்துச்செல்ல ஈரான் அரசு தடை விதித்துள்ளது.

    Next Story
    ×