search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தாக்குதலை முடித்த இஸ்ரேல்.. ஈரானில் பாதிப்புகள் என்ன?.. 25 நாட்கள் காத்திருந்தது ஏன்? - அடுத்து நடப்பது?
    X

    தாக்குதலை முடித்த இஸ்ரேல்.. ஈரானில் பாதிப்புகள் என்ன?.. 25 நாட்கள் காத்திருந்தது ஏன்? - அடுத்து நடப்பது?

    • துல்லியமாக ஈரான் நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை சில மணிநேரங்களிலேயே நடத்தி முடித்துள்ளது இஸ்ரேல்.
    • மூன்று கட்டங்களாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

    இஸ்ரேல் மீது கடந்த 1 ஆம் தேதி சுமார் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இஸ்ரேல் சுமார் 25 நாட்கள் கழித்து 8இன்று ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. துல்லியமாக ஈரான் நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை சில மணிநேரங்களிலேயே நடத்தி முடித்துள்ளது இஸ்ரேல்.

    இதற்காக 100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் விமானங்கள் 2000 கிலோமீட்டர்கள் பயணித்து ஈரான் வானுக்குள் வந்துள்ளன. ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கும் எண்ணெய் கிணறுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் துல்லியமாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

    மூன்று கட்டங்களாக நடந்த இந்த தாக்குதலில் முதற்கட்டமாக ஈரான் பாதுகாப்பு அமைப்பிகள் தாக்கப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தாக்குதலில் ஈரானின் மிசைல்கள் மற்றும் டிரோன்கள் உள்ள தளவாடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.

    இந்த தாக்குதலில் உள்ள துல்லியத்தன்மை இதை இஸ்ரேல் வெகு காலமாக நன்கு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது புலனாகிறது. இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் சிரியா, ஈராக் என மற்ற நாடுகள் உள்ளதால் மிகவும் தொலைவில் இருக்கும் ஈரானை ஏவுகணை மூலம் தாக்கினால் அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகள் விழலாம். அது சர்வதேச சிக்கலில் முடியும். எனவே பைட்டர் பிளேன்களை 2000 கிலோமீட்டர் அனுப்பி மட்டுமே இந்த தாக்குதலை செயல்படுத்த முடியும் என்று இஸ்ரேல் யோசித்து இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கிறது.

    கடந்த 25 நாட்களாக வானிலை மோசமாக இருந்ததால் பைட்டர் பிளேன்கள் குறிவைப்பதில் சிரமம் இருந்ததால் தற்போது இத்தனை நாட்கள் தள்ளி இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனாலும் இந்த தாக்குதலை ஈரான் திறம்பட சமாளித்துள்ளது. இந்த தாக்குதல்களில் 2 ஈரானிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே இந்த தாக்குதல்களால் தங்களுக்கு அதிக பாதிப்பு இல்லை எனவும் இஸ்ரேலுக்கு தங்களின் எதிர் தாக்குதலால் பாதிப்பு எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்து ஈரான் என்ன செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தினால் ஈரான் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அழுத்தத்தால் ஈரான் உடனே தாக்குதல் நடத்தப் பார்க்காது என்றே ஈரான் அதிகார வட்டாரங்களில் இருந்து செய்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. ஆனாலும் மத்திய கிழக்கில் போர் உருவாகும் பதற்றம் முன்னெப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது.

    Next Story
    ×