என் மலர்
உலகம்
X
கனடா நாட்டின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஜஸ்டின் ட்ரூடோ
Byமாலை மலர்6 Jan 2025 9:52 PM IST
- சொந்த கட்சிக்குள்ளேயே நெருக்கடி காரணமாக ஜஸ்டின் ட்ரூடோராஜினாமா செய்ததாக தகவல்
- அக்டோபரின் பிற்பகுதியில் கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது.
கனடா நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அரசியல் நெருக்கடி மற்றும் சொந்த கட்சிக்குள்ளேயே நெருக்கடி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 9 ஆண்டுகளாக வகித்து வரும் கனடாவின் ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
ட்ரூடோவின் விலகல், அக்டோபரின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியிடம் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், லிபரல் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
Next Story
×
X