என் மலர்
உலகம்
X
சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டரில் 6.1 ஆக பதிவானது
Byமாலை மலர்3 Jan 2025 6:31 AM IST
- தென் அமெரிக்காவின் மேற்கில் சிலி நாடு அமைந்துள்ளது.
- நிலநடுக்கம் பூமியில் இருந்து 104 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.
தென் அமெரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள சிலி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை ஐரோப்பிய நிலநடுக்கவியல் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.
நிலநடுக்கமானது பூமியில் இருந்து 104 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொருள் சேதமோ அல்லது உயிரிழப்புகள் குறித்தோ இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
Next Story
×
X