search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    உயிருள்ள  எதையும் டிவியில் காட்டக் கூடாது - தாலிபான் அதிரடி உத்தரவு.. முழிக்கும் ஆப்கானிஸ்தான்!
    X

    உயிருள்ள எதையும் டிவியில் காட்டக் கூடாது - தாலிபான் அதிரடி உத்தரவு.. முழிக்கும் ஆப்கானிஸ்தான்!

    • மகளிர் அமைச்சகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது.
    • பெண்கள் பொது இடங்களில் சத்தமாகப் பேசவும், பாடவும் தடை விதிக்கப்பட்டது.

    2021 ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் நடமாடுவது, பண்டிகை கொண்டாட்டங்கள், ஆண்கள் சவரம் செய்வதுவரை அனைத்துக்கும் தனித்தனி விதிகள் உள்ளன.

    குறிப்பாக பெண்களுக்கு உடை சுதந்திரம், கல்வி, சமூக வாழ்க்கை என அனைத்தும் மறுக்கப்பட்ட அவலமான சூழலே அங்கு நிலவுகிறது. 2021 அதிகாரத்துக்கு வந்த பின்னர் தலைநகர் காபூலில் உள்ள மகளிர் அமைச்சகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது. இதன் மேற்பார்வையிலேயே மேற்கூறிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த அறநெறி அமைச்சகம் தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.

    அதாவது, உயிர் கொண்டு அசையும் எந்த ஒன்றின் புகைப்படங்களையும் செய்தி ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாலிபான் சட்டப்பிரிவு 17 இன் படி உயிருள்ளவற்றின் [living beings] புகைப்படஙகள் ஊடகங்களில் காட்டப்படுவது தடை செய்யப்படுகிறது.

    இந்த புதிய விதியை ஆப்கனிஸ்தானின் பல்வேறு இடங்களில் தாலிபான் கட்டுப்பாட்டு ஊடகங்கள் செயல்படுத்த தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்களின் புகைப்படங்களை வெளியிடாமல் செய்தி ஊடகம் எவ்வாறு செயல்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில் இந்த புதிய விதியை தீவிரமாக கடைபிடிக்க செய்தியாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    முன்னதாக சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி பெண்கள் தங்களின் முகத்தை வெளியே காட்டவும், பொது இடங்களில் சத்தமாகப் பேசவும், பாடவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×