search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    போர் நிறுத்த தீர்மானத்தை முறியடித்த அமெரிக்காவுக்கு வடகொரியா கண்டனம்
    X

    போர் நிறுத்த தீர்மானத்தை முறியடித்த அமெரிக்காவுக்கு வடகொரியா கண்டனம்

    • பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.
    • மனிதாபிமானமற்ற தீமையின் உச்சமும் ஆகும்.

    காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வடகொரியா வின் சர்வதேச அமைப்புக ளுக்கான துணை வெளி யுறவுத்துறை மந்திரி கிம்சன் கியோங் கூறும்போது, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்த கூட்டாளியைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்டவிரோத மற்றும் நியாயமற்ற இரட்டைத் தரங்களின் வெளிப்பாடு மட்டுமல்ல, மனிதாபிமானமற்ற தீமையின் உச்சமும் ஆகும்" என்றார்.

    Next Story
    ×