search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    3-வது மாடியில் இருந்து கீழே விழுந்த பிரபல பாடகர் உயிரிழப்பு
    X

    3-வது மாடியில் இருந்து கீழே விழுந்த பிரபல பாடகர் உயிரிழப்பு

    • தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
    • அருகில் இருந்தவர்கள் சோதித்ததில் அவர் உயிரற்று கிடந்தது உறுதியானது.

    உலகளவில் பிரபலமான பாப்-இசை குழு ஒன் டைரக்ஷன். 1டி என்றும் அழைக்கப்படும் இந்த குழுவில் பாடகராக இருந்தவர் லியாம் பெய்ன். 31 வயதான லியாம் பெய்ன் அர்ஜென்டினா நாட்டின் பலெர்மோவை அடுத்த கோஸ்டா ரிக்கா தெருவில் உள்ள தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

    பியூநியோஸ் ஏரிஸ் எனும் ஓட்டலில் தங்கியிருந்த லியாம் பெய்ன் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இது குறித்து அர்ஜென்டினா காவல் துறை வெளியிட்ட தகவல்களில், "ஓட்டல் மேலாளர் ஏதோ சத்தம் கேட்டு பின்புறம் சென்றிருக்கிறார். அங்கு சென்ற போது, பெய்ன் சுயநினைவின்றி தரையில் விழுந்து கிடந்துள்ளார். கீழே விழுந்த லியாம் பெய்னை அருகில் இருந்தவர்கள் சோதித்ததில் அவர் உயிரற்று கிடந்தது உறுதியானது," என்று தெரிவித்தார்.

    மது பழக்கம் மற்றும் தற்கொலை எண்ணங்களால் தவித்து வந்த லியாம் பெய்ன், கடந்த ஆண்டு தனது பிரச்சினையை சரி செய்து கொள்ள பயிற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார். இது குறித்த பதிவில் அவர், "100 நாட்கள் ஆகிவிட்டது. தற்போது நான் அருமையாக உணர்கிறேன், உண்மையில், இது நன்றாக இருக்கிறது. ரசிகர்கள் கொடுத்த ஆதரவு சிறப்பாக இருந்தது. நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்," என்ற குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×