search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் ட்ரோன் தாக்குதல்.. மாஸ்கோவில் விமான நிலையம் மூடப்பட்டது
    X

    உக்ரைன் ட்ரோன் தாக்குதல்.. மாஸ்கோவில் விமான நிலையம் மூடப்பட்டது

    • இரண்டு டிரோன்கள் மாஸ்கோவில் உள்ள சர்வதேச வர்த்தக மைய கட்டிடம் மீது மோதின.
    • மாஸ்கோ மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் இன்று அதிகாலையில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதலில் காவலாளி ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழப்பு எதுவும் இல்லை.

    இன்று அதிகாலை உக்ரைன் தரப்பில் இருந்து 3 டிரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. எஞ்சிய 2 டிரோன்களும் மின்னணு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டது. அந்த டிரோன்கள் மாஸ்கோவில் உள்ள சர்வதேச வர்த்தக மைய கட்டிடம் மீது மோதி வெடித்தது. இதில் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

    இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு விமான நிலையம் மூடப்பட்டது. மாஸ்கோ தெற்குப் புறநகரில் உள்ள வனுகோவா விமான நிலையத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு எந்த விமானங்களும் வரவில்லை. எந்த விமானமும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லவில்லை. மேலும் மாஸ்கோ மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது.

    Next Story
    ×