என் மலர்
உலகம்
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: இந்திய-அமெரிக்க கூட்டறிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு
- அமெரிக்க-இந்திய கூட்டறிக்கையில் தவறான குறிப்புகள் இருப்பதாக அதிருப்தி குறித்து தெரிவிக்கப்பட்டது.
- இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக மாற்றியுள்ளது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சென்ற வாரம் அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டார். அப்பொது அவரும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத ஆதரவிற்கு எதிராக ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
நேற்று மாலை அமெரிக்க துணைத் தூதர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, ஜூன் 22ம் தேதி அமெரிக்க-இந்திய கூட்டறிக்கையில், தேவையற்ற, ஒருதலைப்பட்சமான மற்றும் தவறான குறிப்புகள் இருப்பதாகவும், அதுகுறித்து பாகிஸ்தானின் கவலைகள் மற்றும் அதிருப்தி குறித்து தெரிவிக்கப்பட்டது என பாகிஸ்தான் தெரிவித்தது.
பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு நன்றாக முன்னேறி வருவதாகவும், பாகிஸ்தான்-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த, பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை மையமாகக் கொண்ட சூழலை உருவாக்குவது அவசியம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையானது, பாகிஸ்தானை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக சித்தரித்துள்ளது என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.