என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதில் பாகிஸ்தானுக்கு 4-வது இடம்
- பாகிஸ்தான் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது.
- கடந்த மார்ச் மாத நிலவரப்படி சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதனால் அங்கு பணவீக்கம், விலை உயர்வு போன்றவற்றால் ஏழைகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை சமாளிப்பதற்காக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன்களை வாங்கி வருகிறது.
அதன்படி கடந்த மார்ச் மாத நிலவரப்படி சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. சுமார் ரூ.3 லட்சம் கோடியுடன் அர்ஜென்டினா இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நாணய நிதியத்திடம் மேலும் 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டு உள்ளது. இந்த கடனை பெறும்போது சர்வதேச நாணய நிதியத்திடம் அதிகம் கடன் பெற்ற 4-வது நாடாக பாகிஸ்தான் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.