search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பெய்ரூட்டில் அதிக சத்தத்துடன் பறந்த இஸ்ரேல் போர் விமானங்கள்: பீதியில் மக்கள்
    X

    பெய்ரூட்டில் அதிக சத்தத்துடன் பறந்த இஸ்ரேல் போர் விமானங்கள்: பீதியில் மக்கள்

    • இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே நேரடி போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • ஹிஸ்புல்லா தலைவர் உரையாற்றிய நிலையில் இஸ்ரேல் விமானங்கள் பெய்ரூட்டை வட்டமிடுள்ளன.

    ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. அதேபோல் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர் ராணுவ கமாண்டர் ஃபவத் சுக்ர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா சூளுரைத்துள்ளது.

    ஹிஸ்புல்லாவை ஈரான் பின்புறத்தில் இருந்து இயக்கி வருகிறது. இதனால் லெபனானில் இருந்து இஸ்ரேலை ஈரான் ஆதரவுடன் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு ஹிஸ்புல்லா தலைவர் சய்யத் ஹசன் நஸ்ரல்லா உரையாற்றினார்.

    இதற்கிடையே இஸ்ரேல் போர் விமானம் 30 நிமிடத்திற்கும் மூன்று முறை சத்தம் எழுப்பியவாறு பெய்ரூட் நகரில் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் பொது இடங்களில் நின்றிருந்த மக்கள் சிதறியடித்து பாதுகாப்பான இடத்திற்கு ஒடினர். பெய்ரூட்டில் உள்ள படாரோ மாவட்டத்தில் உள்ள கஃபேயில் மக்கள் சிதறியடித்து ஓடியதை பார்க்க முடிந்தது என ராய்ட்டர்ஸ் ரிப்போர்ட்டர் தெரிவித்துள்ளார்.

    லெபனானில் மோசமான நிலை நிலவி வருவதால் அமெரிக்காரி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×