search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பப்புவா நியூ கினியா: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 670 ஆக உயர்வு
    X

    பப்புவா நியூ கினியா: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 670 ஆக உயர்வு

    • சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.
    • நிலச்சரிவில் சிக்கி 650-க்கு மேற்பட்டோர் புதையுண்டது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    போர்ட் மோர்ஸ்பி:

    பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.

    இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதல்கட்ட தகவலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர். 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.

    இந்நிலையில், ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறுகையில், நிலச்சரிவில் 150 வீடுகள் மண்ணில் புதைந்து தரைமட்டமானது. பலியானோரின் எண்ணிக்கை 670 ஐ கடந்துள்ளது என தெரிவித்த அவர், இந்த பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

    நிலச்சரிவு ஏற்பட்டு 650-க்கு மேற்பட்டோர் புதையுண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×