என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
ஜி7 மாநாடு - உலக தலைவர்களுடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி
- ஜி7 மாநாடு ஜெர்மனியில் நேற்று தொடங்கியது.
- இதில் பங்கேற்ற பிரதமர் மோடி உலக தலைவர்களை சந்தித்தார்.
பெர்லின்:
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாநாடு ஜெர்மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கிடையே, ஜி-7 மாநாடு நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ் கைகுலுக்கி வரவேற்றார்.
மேலும், மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோரும் பிரதமர் மோடியிடம் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.
இதையடுத்து, உலக தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.