என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
பிரேசில் அதிபர் லூலாவை சந்தித்து பேசிய பிரதமர் மோடி
- இந்தியாவின் ஒத்துழைப்பை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.
- ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி லூலாவை சந்தித்தார்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் பற்றி ஆய்வு செய்தார். இதோடு எரிசக்தி, உயிரி எரிபொருள், பாதுகாப்பு மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் ஒத்துழைப்பை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.
நைஜீரியாவுக்கு இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிரேசில் வந்த பிரதமர் மோடி, இங்கு நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி லூலாவை சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், "நாங்கள் எங்கள் நாடுகளுக்கு இடையிலான முழு அளவிலான இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்தோம். எரிசக்தி, உயிரி எரிபொருள்கள், பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
19வது ஜி20 மாநாட்டை பிரேசில் நடத்துகிறது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் லூலாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.