என் மலர்
உலகம்

போப்பாண்டவர்
அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார் போப்பாண்டவர்
- கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர்.
- போப் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
வாடிகன்:
கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர். இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்குச் செல்லும் வழியில் போப் பிரான்சிஸ் அடுத்த பயணத்திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது, வரும் ஆகஸ்ட் மாதம் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகருக்குச் செல்ல உள்ளேன். அதன்பின்னர் மங்கோலியாவுக்கு முதன்முதலாகச் செல்கிறேன். 2024-ம் ஆண்டு இந்தியா வர உள்ளேன் என தெரிவித்தார்.
பிரதமர் மோடி அழைப்பின் பேரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் இந்தியா வர உள்ளார்.
ஏற்கனவே 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு வரும் போப்பாண்டவரின் திட்டம் கடைசி நேரத்தில் ரத்தானது.
Next Story






