என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய வாருங்கள்: அல்ஜீரியாவுக்கு ஜனாதிபதி முர்மு அழைப்பு
- அல்ஜீரியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்னும் பெருமையை முர்மு பெற்றுள்ளார்.
- இந்தியாவில் தொழில்களை எளிதில் நிறுவி, வளர்ச்சி காண முடிகிறது என்றார்.
அல்ஜீர்ஸ்:
அல்ஜீரியா, மொரீசேனியா மற்றும் மலாவி ஆகிய 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 13 முதல் 19 வரையிலான நாட்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 3 நாடுகளுக்கான அவருடைய சுற்றுப்பயணம் தொடங்கியது.
இந்நிலையில், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி முர்மு, அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகரைச் சென்றடைந்தார். அவரை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் வரவேற்றார்.
அல்ஜீரியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்னும் பெருமையை முர்மு பெற்றுள்ளார்.
இந்நிலையில், அல்ஜீரியா-இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு ஜனாதிபதி முர்மு பேசினார். அவர் பேசும்போது, கடந்த சில ஆண்டுகளாக இந்தியா போற்றத்தக்க வகையில் வளர்ச்சி கண்டு, 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரத்திற்கு உயர்ந்து உள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி போன்று உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் வேறு சில சீர்திருத்தங்களும் நாட்டில் உள்ளன. இதனால், இந்தியாவில் தொழில்களை எளிதில் நிறுவி, வளர்ச்சி காண முடிகிறது என்றார்.
தொடர்ந்து அவர், எங்களுடைய மேக் இன் இந்தியா மற்றும் மேக் பார் வேர்ல்டு திட்டங்களில் இணைய வரும்படி அல்ஜீரிய நிறுவனங்களை நான் வரவேற்கிறேன். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மருந்து, விண்வெளி, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட துறைகளில் பல விசயங்களை இந்தியா சாதித்துள்ளது. இந்த துறைகளில் நம்முடைய அல்ஜீரிய பங்குதாரர்களுக்கு எங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம் என்று அவர் பேசியுள்ளார்.