என் மலர்
உலகம்
உக்ரைனின் சுதந்திர தினம் நெருங்குகிறது.. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அதிபர் ஜெலன்ஸ்கி அறிவுறுத்தல்
- சுதந்திர தினத்தன்று உக்ரைன் மீது பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் தயாராகி வருகிறது.
- உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6194 கோடி மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி உள்ளது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினரும் போரிட்டு வருகிறார்கள். இதற்கிடையே உக்ரைனில் சுதந்திர தின விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில் சுதந்திர தினத்தில் உக்ரைனில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "இந்த வாரம் ரஷிய படைகள் தீய செயல்களை செய்ய முயற்சிக்கலாம் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளார்.
சுதந்திர தினத்திற்கு முன்பாக ரஷியா மிகப்பெரிய கொடூரமான தாக்குதலை நடத்தலாம் என்று நாட்டு மக்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனின் ஆயுதப்படைகளின் அதிகாரி ஒருவர் கூறும்போது, "சுதந்திர தினத்தன்று உக்ரைன் மீது பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் (ரஷியாவின் ஆதரவு நாடு) தயாராகி வருகிறது.
பெலாரசில் இருந்து மட்டுமல்ல, கருங்கடல் மற்றும் ரஷியாவில் இருந்தும் ஒரே நேரத்தில் மூன்று திசைகளிலும் இருந்து தாக்குதல் நடத்தலாம் என்றார்.
இதற்கிடையே உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6194 கோடி மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி உள்ளது.