search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தான் பிரதமர்களை விட அவர்களுடைய மனைவிகளின் சொத்து மதிப்பு அதிகம்
    X

    பாகிஸ்தான் பிரதமர்களை விட அவர்களுடைய மனைவிகளின் சொத்து மதிப்பு அதிகம்

    • இம்ரான் கானுக்கு பாகிஸ்தானுக்கு வெளியே வாகனம் அல்லது சொத்து இல்லை, முதலீடு எதுவும் இல்லை.
    • இம்ரான் கான் மூன்று திருமணங்களைச் செய்துள்ளார், ஆனால் ஷாபாஸ் ஐந்து திருமணங்களைச் செய்தார்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அவருக்கு முன் இருந்த இம்ரான் கான் ஆகியோரின் மனைவிகள், அவர்களது கணவர்களை விட பணக்காரர்கள் என்று அதிகாரப்பூர்வ ஆவணங்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2020ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டுக்கான சொத்து மதிப்பு விவரங்களை, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    அந்த அறிக்கைகள்படி, இம்ரான் கான் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.2,00,000 மதிப்புள்ள நான்கு ஆடுகள் வைத்துள்ளார். இம்ரான் கானுக்கு பாகிஸ்தானுக்கு வெளியே வாகனம் அல்லது சொத்து இல்லை, முதலீடு எதுவும் இல்லை. மேலும் ரூ.6 கோடிக்கும் அதிகமான தொகை வங்கிக் கணக்குகளில் உள்ளது. இது தவிர பாகிஸ்தானின் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில், இம்ரானுக்கு 329,196 அமெரிக்க டாலர்களும், 518 பவுண்டுகளும் இருப்பு உள்ளது. இதற்கிடையில், அவரது மனைவி புஷ்ரா பீபியின் நிகர மதிப்பு, பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.14.211 கோடி.

    தற்போதைய பிரதமரின் சொத்து மதிப்பு, பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.14.178 கோடி கடனுடன் ரூ.10.421 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஷெபாஸ் ஷெரீப் வைத்துள்ளார். தற்போதைய பிரதமரின் முதல் மனைவியான நுஸ்ரத் ஷெபாஸ், ரூ.23.029 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டுள்ளார் மற்றும் லாகூர் மற்றும் ஹசாரா பிரிவுகளில் தலா 9 விவசாய சொத்துக்கள் மற்றும் ஒரு வீடு ஆகியவற்றைக் கொண்டுள்ளார்.

    அவரது இரண்டாவது மனைவி தெஹ்மினா துரானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.57.6 லட்சம். இதற்கிடையில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ-சர்தாரி அந்நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவர். அவருடைய மொத்த சொத்து மதிப்பு, பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.160 கோடி. தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தனது 23 வயதில் திருமணம் செய்து கொண்டார் மற்றும் அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உண்டு.

    1993 ஆம் ஆண்டில், தனது 43 வயதில், அவர் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார், அதில் ஒரு மகள் பிறந்தார். ஆனால் அவர் இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்தார். மீண்டும் அதே ஆண்டில் நிலோபர் கோசாவை மூன்றாவது முறையாக மணந்தார். தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டில், அவர் தெஹ்மினா துரானை மணந்தார்.

    நான்காவது திருமணம் செய்த பிறகும், 2012-ம் ஆண்டு நிற்காமல், இந்த முறை கல்சும் ஹயா என்ற பெண்ணை ஐந்தாவது திருமணம் செய்து கொண்ட ஷாபாஸ் ஷெரீப், இந்த திருமணத்தை அனைவரிடமிருந்தும் மறைத்து வைத்தார். அவர் மூன்று மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். இம்ரான் கான் மூன்று திருமணங்களைச் செய்துள்ளார், ஆனால் ஷாபாஸ் ஐந்து திருமணங்களைச் செய்தார். தற்போது, ஷாபாஸ் ஷெரீப் தனது இரண்டு மனைவிகளான நுஸ்ரத் மற்றும் தெஹ்மினா துரானியுடன் வசித்து வருகிறார்.

    Next Story
    ×