என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹால் நியமனம்
- நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹாலை அந்நாட்டு ஜனாதிபதி நியமனம் செய்தார்.
- புஷ்ப கமல் தஹார் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
காத்மண்டு:
275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள பாராளுமன்றத்தில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு தேர்தல் மூலமும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
நேபாளத்தில் நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியுடன் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்தது. முதல் இரண்டரை ஆண்டுகள் தாம் பிரதமர் பதவி வகிப்பதாக ஒப்பந்தமும் செய்தது.
இதற்கிடையே, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசந்தா இன்று அந்நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்து பிரதமருக்கான உரிமை கோரினார். அப்போது தனக்கு ஆதரவளிக்கும் 169 எம்.பி.க்களின் பட்டியலையும் அளித்தார்.
இந்நிலையில், நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹால் பிரசந்தாவை நியமனம் செய்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புஷ்ப கமல் தஹர் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது