என் மலர்
கத்தார்
- மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
- மொராக்கோ அணி இந்தத் தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3-வது காலிறுதியில் போர்ச்சுக்கல், மொராக்கோ அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் மொராக்கோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில், மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மொராக்கோ அணி முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை என்ற குறையையும் தீர்த்துள்ளது.
- கூடுதல் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
- பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் 3-4 என்ற கணக்கில் நெதர்லாந்து தோல்வி.
கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு லுசைல் கால்பந்து மைதானத்தில் தொடங்கிய 2வது கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 35-வது நிமிடத்தில்அர்ஜெண்டினா வீரர் மொலினா முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.
2 வது பகுதியின் 73-வது நிமிடத்தில் லியோனர் மெஸ்ஸி அர் ஜென்டினாவுக்கான 2-வது கோலை அடித்தார். இதனால் வெற்றி அர்ஜென்டினா பக்கம் இருந்தது. எனினும் நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83 வது நிமிடத்தில் தமது அணிக்காக முதல் கோலை அடித்தார். தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போது 11 நிமிடங்களில் அவரே இரண்டாவது கோலை அடித்து அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு முட்டுக் கட்டை போட்டார்.
கூடுதல் நேர ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இதனை தொடர்ந்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.
- பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 கோல் கணக்கில் குரோஷியா வெற்றி
- உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது பிரேசில்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடரில் தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு 8.30 மணிக்கு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியினான பிரேசில் அணி, குரோஷியாவை எதிர் கொண்டது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்ட நிறைவுவரை இரு அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில் கூடுதல் ஆட்ட நேரத்தின்போது 106 வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர் கோல் அடித்தார். தொடர்ந்து 117வது நிமிடத்தில் குரோஷியா தரப்பில் புருனோ பெகோவிக் ஒருகோல் அடித்ததால் ஆட்டம் சமனில் ஆடிந்தது. இதையெடுத்து பெனால்டி சூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் 4-2 கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்திய குரோஷியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
- காலிறுதிச் சுற்றில் 8 நாடுகள் விளையாடுகின்றன.
- இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.
லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும். நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், நாக் அவுட் சுற்றுகள் நள்ளிரவுடன் முடிந்தது. நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை மறுதினம் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதியில் குரோசியா, பிரேசில் அணிகள் மோதுகின்றன. டிசம்பர் 10-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது காலிறுதியில் மொராக்கோ, போர்ச்சுக்கல் அணியும், நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 3-வது காலிறுதியில் நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகளும் மோதுகின்றன. நான்காவது காலிறுதி டிசம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
- முதல் பாதியில் போர்ச்சுக்கல் அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- இரண்டாம் பாதியிலும் போர்ச்சுக்கல் 4 ஒரு கோல் அடித்து அசத்தியது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதியில் போர்ச்சுக்கலின் ராமோஸ் 17வது நிமிடத்திலும், பெப் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் போர்ச்சுக்கல் அணி 2-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் போர்ச்சுக்கல் கோல் மழை பொழிந்தது. போர்ச்சுக்கலின் ராமோஸ் 51-வது நிமிடத்திலும், ரபேல் கியூரியோ 55-வது நிமிடத்திலும், ராமோஸ் 67-வது நிமிடத்திலும், 92-வது நிமிடத்தில் ரபேல் லியோ தலா ஒரு கோல் அடித்தனர்.
சுவிட்சர்லாந்து சார்பில் 58வது நிமிடத்தில் மானுவல் அகாஞ்சி ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
- ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
- இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் மொராக்கோ, ஸ்பெயின் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. எனவே முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தன.
இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் இரு அணியும் 0 - 0 என சமனிலை வகித்தது.
இதையடுத்து, கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.
இறுதியில், மொராக்கோ அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
- முதல் பாதியில் பிரேசில் அணி 4 கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- இரண்டாம் பாதியில் தென் கொரியா அணி ஒரு கோல் அடித்தது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் பாதியில் பிரேசில் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 76-வது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு எளிதில் முன்னேறியது.
- முதல் பாதியில் ஜப்பான் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- இரண்டாம் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் ஜப்பான், குரோசியா அணிகள் மோதின.
தொடக்கத்தில் ஜப்பான் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டெய்சன் மேடா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 55-வது நிமிடத்தில் குரோசியாவின் இவான் பெரிசிக் ஒரு கோல் அடித்தார். இதனால் 1-1 என சமனிலை வகித்தன.
கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.
இறுதியில், குரோசியா அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
- முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 2-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயோ சகா ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியறது.
செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட முடியவில்லை.
- முதல் பாதியில் பிரான்ஸ் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ், போலந்து அணிகள் மோதின.
தொடக்கம் முதல் பிரான்ஸ் அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 44 -வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் ஒலிவியர் கிரவுட் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 74-வது நிமிடத்திலும், 91வது நிமிடத்திலும் பிரான்சின் கைலியன் மபாபே தலா ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் கடைசி கட்டமான 99-வது நிமிடத்தில் போலந்தின் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது.
- உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார்.
- அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.
தோகா:
கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில், மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி நேற்று முறியடித்தார்.
கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின் முன்னணி வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்சி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பையில் 9 கோல்களை (22 ஆட்டம்) அவர் தொட்டார்.
உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.
- முதல் பாதியில் அர்ஜென்டினா அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
தொடக்கம் முதல் அர்ஜென்டினா அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார். 77-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் என்சோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.