என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
காங்கோவில் சோகம் - அப்பாவி பொதுமக்கள் 17 பேரை கொன்ற கிளர்ச்சியாளர்கள்
- கிழக்கு காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
- இதில் பொதுமக்கள் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கோவின் கிழக்கில் உள்ள இடுரி மற்றும் ட்ஜிகு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த மாகாணங்களில் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியது. இந்த சம்பவத்தில் அந்த வாகனங்களில் பயணம் செய்த டிரைவர் உள்பட பொதுமக்கள் 17 பேர் கிளர்ச்சியாளர்கள் குழுவால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.