search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆட்சியைப் பிடிக்கும் இடதுசாரிகள் - பிரதமராகும் கெய்ர் ஸ்டார்மர்? பச்சைக்கொடி காட்டுவாரா பிரிட்டன் மன்னர்..
    X

    ஆட்சியைப் பிடிக்கும் இடதுசாரிகள் - பிரதமராகும் கெய்ர் ஸ்டார்மர்? பச்சைக்கொடி காட்டுவாரா பிரிட்டன் மன்னர்..

    • 14 வருடங்கள் கழித்து தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
    • தற்போதைய அரசர் மூன்றாம் சார்லஸ்தான் அவர் பிரதமராக ஆகவேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுப்பார்.

    பிரிட்டன் நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று [ஜூன் 4] நடந்து முடிந்தது. பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 பாராளுமன்றத் தொகுதிகளிலும் நேற்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தொடக்கம் முதலே இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகவும் பின்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது பிரதான இடதுசாரி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கத் தேவையான 326 இடங்களையும் கடந்து 408 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 2010 ஆம் ஆண்டில் இருந்து பிரிட்டனில் ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 136 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

    பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து 14 வருடங்கள் கழித்து தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். 61 வயதாகும் கெய்ர் ஸ்டார்மர் தொழில்முறையாக வழக்கறிஞராக இருந்தவர்.

    இரண்டாம் எலிசபெத் மாகாராணியிடமிருந்து கிநைட் பட்டம் பெற்றவர். கடந்த 2015 இல் முதல் முறையாக பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போது லண்டனில் ஹோல்பார்ன் மற்றும் st. பங்கிராஸ் தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளார்.

    இவரின் வெளியுறவுக் கொள்கைகள் இந்தியாவிற்கு சாதகவமானதாகவே இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துகின்றனர். தொழிலாளர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் உலக நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவுடனான புதிய ஸ்டிராடஜிக் பார்ட்னர்ஷிப், ஹிந்துக்கள் பண்டிகைகளை பிரிட்டனில் கொண்டாட முழு சுதந்திரம் உள்ளிட்டவை இவரின் கொள்கைகளில் அடங்கும். ஆனால் ரிஷி சுனக்கை போல், அதிகப்படியான இந்திய குடியேற்றத்துக்கு எதிரான கருத்துள்ளவராக கெய்ர் ஸ்டார்மர் பார்க்கப்படுகிறார்.

    இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், வென்ற கட்சியை, பிரிட்டன் அரசர் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பது வழக்கமாக உள்ளது. ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்டு அரசர் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்க முழு அதிகாரம் உள்ளது. தொழிலாளர் கட்சி சார்பில் கெய்ர் ஸ்டார்மர் வெற்றி பெற்றாலும் தற்போதைய அரசர் மூன்றாம் சார்லஸ்தான் அவர் பிரதமராக ஆகவேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுப்பார்.

    Next Story
    ×