search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் பங்கேற்கமாட்டார்
    X

    பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் பங்கேற்கமாட்டார்

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்
    • புதின் வரவில்லை என்ற முடிவு அனைவருக்கும் சிறந்தது என்று இந்தோனேசிய அரசு அதிகாரி கூறி உள்ளார்.`

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் பாலியில் அடுத்த வாரம் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா உக்ரைனை ஆக்கிரமித்தபிறகு முதல் முறையாக, அமெரிக்க அதிபர் பைடனும், ரஷிய அதிபர் புதினும் இந்த உச்சிமாநாட்டில் ஒன்றாக கலந்துகொள்வார்கள் என எதிர்பாக்கப்பட்டது.

    ஆனால், ரஷிய அதிபர் புதின் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என இந்தோனேசிய அரசு அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். உக்ரைன் போர் விஷயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடனான மோதல் போக்கை தவிர்ப்பதற்காக இந்த மாநாட்டில் இருந்து புதின் ஒதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதின் வரவில்லை என்ற முடிவு அனைவருக்கும் சிறந்தது என்று ஜி20 நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் லஹட் பின்சார் பாண்ட்ஜைத்தான் கூறி உள்ளார்.

    Next Story
    ×