என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
எனது பேவரைட் கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
- நியூசிலாந்து சென்றுள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் இடையே பேசினார்.
- அப்போது, எனக்கு பிடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் என குறிப்பிட்டார்.
வெலிங்டன்:
வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நியூசிலாந்தின் வெலிங்டனில் புதிய இந்தியத் தூதரக துணை அலுவலகத்தை மந்திரி ஜெய்சங்கர் திறந்துவைத்தார். அப்போது நியூசிலாந்து வாழ் இந்திய வம்சாவளியினர் இடையே பேசுகையில் அவர் கூறியதாவது:
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு எப்போதும் நாம் முக்கியத்துவம் அளித்துவருகிறோம். இந்தியா, நியூசிலாந்து இடையே வர்த்தகம் உள்பட பல துறைகளில் நம் உறவை மேம்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.
கிரிக்கெட்டில் நம் இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான ஒத்துழைப்பு உள்ளது. நியூசிலாந்து வீரர் ஜான் ரைட்டை இந்தியர் எவரும் மறக்க மாட்டர்கள். ஐ.பி.எல். போட்டியைப் பார்க்கும் எவரும் ஸ்டீபன் பிளெமிங்கை புறக்கணிக்க முடியாது.
கிரிக்கெட்டில் நமது அணி வெற்றிபெற வேண்டும் என்றே விரும்புவோம். அதே நேரத்தில் மற்ற அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிப்போம்.
எனக்கு பிடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர், ஆனால் அது வேறு விஷயம் என குறிப்பிட்டார்.