search icon
என் மலர்tooltip icon

    சவுதி அரேபியா

    • படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பாதிக்கப்பட்டவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவுக்குச் சென்று கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சவூதி அரேபியாவின் தென்மேற்கில் நேற்று மாலை பயணிகள் சிலர் பேருந்தில் யாத்ரீகர்களுடன் ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்து பிரேக் பிடிக்காததை அடுத்து பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி, கவிழ்ந்து, தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

    இதில், உம்ரா யாத்ரீகர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 29 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவுக்குச் சென்று கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • தாறுமாறாக ஓடிய பஸ் பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
    • விபத்தில் 20 பேர் பலியானார்கள். 29 பேர் காயம் அடைந்தனர்.

    சவுதி அரேபியாவின் தெற்கு மாகாணமான ஆசிரில் பஸ் ஒன்று மெக்காவுக்கு சென்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உம்ரா பயணமாக மெக்காவுக்கு பயணம் செய்தனர். அப்போது ஒரு பாலம் ஒன்றில் பஸ் சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய பஸ் பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் 20 பேர் பலியானார்கள். 29 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர், விவரங்களை வெளியிடவில்லை.

    • முகாப் கட்டடமானது, 400 மீட்டர் உயரம், நீளம், அலகம் கொண்ட கனசதுர வடிவ கட்டுமானமாக அமைய உள்ளது.
    • இந்த பிரமாண்ட நகர திட்டம் தொடர்பான வீடியோவை சவுதி அரசு வெளியிட்டுள்ளது.

    ரியாத்:

    வானளாவிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி உலக நாடுகளை வியக்க வைக்கும் சவுதி அரேபிய அரசு, அடுத்த பிரமாண்டமான ஒரு கட்டுமான திட்டத்தை அறிவித்துள்ளது. சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் புதிய முராபா என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய நகர்ப்பகுதியை உருவாக்கி வருவதாகவும், நகரின் மையமாக, முகாப் என்று அழைக்கப்படும் பிரமாண்ட கட்டிடம் இடம்பெற உள்ளதாகவும், அரபு செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த பிரமாண்ட நகர திட்டம் தொடர்பான வீடியோவை சவுதி அரசு வெளியிட்டுள்ளது. இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    முகாப் திட்டமானது, 400 மீட்டர் உயரம், 400 மீட்டர் நீளம், 400 மீட்டர் அகலம் கொண்ட கனசதுர வடிவ கட்டுமானமாக அமைய உள்ளது. இந்த திட்டத்தில் அருங்காட்சியகம், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம், தியேட்டர் மற்றும் 80-க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவை இடம்பெறும் என வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய முராபா நகரம், 2.5 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும். 104,000 குடியிருப்புகள், 9,000 ஹோட்டல் அறைகள், 14 லட்சம் சதுர மீட்டர் அலுவலக இடம், 6.2 லட்சம் சதுர மீட்டர் ஓய்வு மையங்களுக்கான பகுதி மற்றும் 18 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு சமுதாய வசதிகள் இருக்கும்.

    இந்த பகுதிக்கான பிரத்யேக போக்குவரத்து அமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் விமான நிலையத்திலிருந்து 20 நிமிடத்தில் இந்த நகரை அடையலாம். புதிய நகரின் கட்டுமான பணிகள் 2030ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளி திட்டத்தை தொடங்கியது.
    • விண்வெளிக்கு முதல் முறையாக பெண் வீராங்கனையை சவுதி அரேபியா அனுப்ப உள்ளது.

    ரியாத்:

    சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு 'விஷன் 2030' என்ற விண்வெளி திட்டத்தை தொடங்கியது. இதில் குறுகிய-நீண்ட விண்வெளி பயணங்களுக்காக வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

    சமீப காலமாக விண்வெளி திட்டத்துகான பணிகளை சவுதி அரேபியா தீவிரப்படுத்தி வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது. இதன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய முதல் அரபு நாடு என்ற பெருமையை பெற்றது.

    இந்த நிலையில் விண்வெளிக்கு முதல் முறையாக பெண் வீராங்கனையை சவுதி அரேபியா அனுப்ப உள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான ரயானா பர்னாவி, சக நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் அலி அல்கர்னி உள்பட 4 பேர், ஏ.எக்ஸ்-2 விண்வெளி பயணத்தில் இணைய உள்ளதாக சவுதி அரேபியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல உள்ளனர். ரயானா பர்னாவி உள்பட 4 பேர் பயணிக்க உள்ள விண்கலம் அமெரிக்காவில் இருந்து ஏவப்பட உள்ளது.

    33 வயதான ரயானா பர்னாவி, நியூசிலாந்தில் டண் ஒடாகோ பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அல்பை சல் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவ அறிவியலில் முதுகலை பட்டமும் பெற்றார்.

    புற்று நோய் ஸ்டெம் செல்கள் ஆராய்ச்சியில் 9 ஆண்டு அனுபவம் உள்ளவர். அவர் விண்வெளிக்கு செல்லும் முதல் அரபு பெண் என்ற சிறப்பை பெறுகிறார்.

    1985-ம் ஆண்டு சவுதி இளரசரும், விமானப்படை விமானியுமான சுல்தான் பின் சுல்மான் பின் அப்துல் அஜிஸ் அமெரிக்கா ஏற்பாடு செய்த விண்வெளி பயணத்தில் பங்கேற்று விண்வெளிக்கு சென்ற முதல் அரபு இஸ்லாமியர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது.
    • வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்.

    ரியாத்:

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அனைத்து நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதித்தன. சவுதி அரேபியா அரசும் ஹஜ் பயணிகளின் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

    கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த பிறகு ஹஜ் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து குறைந்த அளவிலேயே ஹஜ் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா காலங்களில் ஹஜ் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக அமைச்சர் தவுபிக் அல் ரபியா கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது. கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு இருந்த நிலை மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

    வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

    கொரோனா காலங்களில் ஹஜ் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் சவுதி அரேபியா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    • விக்கிபீடியாவில் ஊடுருவி பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்தியதாக அதன் பணியாளர்கள் 2 பேரை சவூதி அரேபியா அரசு கைது செய்துள்ளது.
    • ஒருவருக்கு 32 ஆண்டு ஜெயில் தண்டனை.

    சவூதி அரேபியா நாட்டில் விக்கிபீடியாவில் ஊடுருவி கருத்துக்களை பதிவிட்டதாக சமீபத்தில் முன்னாள் டுவிட்டர் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    இதன் தொடர்ச்சியாக தற்போது விக்கிபீடியாவில் ஊடுருவி பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்தியதாக அதன் பணியாளர்கள் 2 பேரை சவூதி அரேபியா அரசு கைது செய்துள்ளது. இதில் ஒருவருக்கு 32 ஆண்டு ஜெயில் தண்டனையும், மற்றொருவருக்கு 8 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமெரிக்கா-ரஷியா இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.
    • மரண வியாபாரி என்று அழைக்கப்படும் விக்டர் பவுட்டை விடுவித்தது அமெரிக்கா.

    அபுதாபி :

    உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போரை தொடங்கியதும் முதல் நாடாக ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா பல்வேறு மேற்கத்திய நாடுகளையும் ரஷியாவுக்கு எதிராக அணி திரட்டியது. இதன் காரணமாக அமெரிக்கா-ரஷியா இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

    இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக ரஷியா சென்ற அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனா்ஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    உக்ரைன் போா் விவகாரத்தில் தங்கள் மீது விதிக்கப்படும் பொருளாதார தடைகளை நீக்கச் செய்வதற்காக, கிரைனா்சை ரஷியா பிணைக் கைதியாக பயன்படுத்தும் என்று அச்சம் எழுந்தது. இதனால் கிரைனா்சை மீட்க வேண்டுமென்று அதிபா் ஜோ பைடனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் ரஷிய அரசுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடங்கியது. அப்போது ஆயுத வியாபார குற்றச்சாட்டில் 10 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷியாவை சேர்ந்த விக்டர் பவுட்டை விடுவிக்க ரஷியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    போரை விரும்பும் மூர்க்கத்தனமான நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் மரண வியாபாரி என்று அழைக்கப்படும் விக்டர் பவுட்டை விடுவிக்க அமெரிக்கா தயக்கம் காட்டி வந்தது.

    இந்த நிலையில் 6 மாதங்களாக நடைபெற்ற கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் பிரிட்னி கிரைனா்ஸ் மற்றும் விக்டர் பவுட் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். இருவரும் விமானம் மூலம் அபுதாபி அழைத்து செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து தங்களின் தாயகத்துக்கு திரும்பினர்.

    • சவுதி அரேபியா செல்ல விசா பெற இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
    • போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிப்பதில் இருந்து இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்க சவுதி அரேபியா முடிவு

    ரியாத்:

    சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்வதற்கான விசா பெற இந்திய குடிமக்கள் இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.

    இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற இரு நாடுகளின் முயற்சியின் ஒரு பகுதியாக சவுதி விசாவிற்கு போலீஸ் அனுமதி ஆவணம் தேவையில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான உறவுகள் மற்றும் மூலோபாய கூட்டுறவைக் கருத்தில் கொண்டு, போலீஸ் அனுமதிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் இருந்து இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

    • முகமது பின் சல்மான் நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
    • பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.

    ரியாத் :

    உலகில் இப்போதும் மன்னராட்சி நடந்து வரும் சில நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அங்கு 86 வயதான சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மன்னராக உள்ளார்.

    அவருக்கு அடுத்து அதிகாரமிக்க தலைவராக அந்த நாட்டின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் உள்ளார். இவர் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

    குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி பாலின சமுத்துவத்தை ஏற்படுத்தியதன் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இந்த நிலையில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சவுதி அரேபியாவின் பிரதமராக மன்னர் சல்மான் நியமித்துள்ளார். அதோடு நாட்டின் மந்திரிசபையையும் மன்னர் மாற்றியமைத்துள்ளார்.

    அதன்படி முகமது பின் சல்மானின் இளைய சகோதரரும், இளவரசருமான காலித் பின் சல்மான், ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் அவர் துணை ராணுவ மந்திரியாக இருந்து வந்தார்.

    இதனிடையே பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தாலும், மந்திரிசபை கூட்டங்களுக்கு மன்னர் சல்மான்தான் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிபராக பொறுப்பேற்ற பின் சவுதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.
    • சவுதி பட்டத்து இளவரசர்முகமது பின் சல்மானை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தார்.

    ரியாத்:

    அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் முதல் நாடாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் வந்தடைந்தார்.

    இந்நிலையில், இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியா புறப்பட்டார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு ஜோ பைடன் வந்தடைந்தார். அவருக்கு அரசுமுறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தார். அதிபராக பொறுப்பேற்ற பின் சவுதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

    இந்த சந்திப்பின் போது கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், முகமது பின் சல்மானை அதிபர் ஜோ பைடன் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிரபல கம்பெனி பெயரில் இந்திய தம்பதிகள் மோசடியை செய்து வந்தனர்.
    • குறிப்பாக மின் வினியோகம் செய்யும் கம்பெனியை ஏமாற்றியதாக அந்த நிறுவனம் புகார் தெரிவித்தது.

    ஜோகன்ஸ்பர்க்:

    சவூதி அரேபியாவில் வசித்து வரும் இந்திய தம்பதிகளான முகமது-ரசீசா மொய்தீன் மற்றும் வெர்னன்-ஆராதனா ஆகியோர் பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.

    பிரபல கம்பெனி பெயரில் அவர்கள் இந்த மோசடியை செய்து வந்தனர். குறிப்பாக மின் வினியோகம் செய்யும் கம்பெனியை ஏமாற்றியதாக அந்த நிறுவனம் புகார் தெரிவித்தது.

    இதையடுத்து ஜோகன்ஸ்பர்க் மற்றும் துர்பான் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து எலெக்ரானிக் பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    • ஹஜ் புனித பயண சடங்குகளில் பங்கேற்க 10 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • கொரோனா குறைந்ததால் மெக்காவில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

    மெக்கா:

    இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மெக்காவில் ஹஜ் புனித பயணத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் மெக்காவில் நேற்று தொடங்கிய ஹஜ் புனித பயண சடங்குகளில் பங்கேற்க 10 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் மெக்கா களை கட்டியுள்ளது.

    அதேவேளை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்றுள்ள 18 வயது முதல் 65 வயது வரை கொண்டவர்கள் மெக்காவில் அனுமதிக்கப்பட்டனர்.

    வழக்கமாக மெக்காவில் புனித பயணத்தின்போது 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் தற்போது புனித பயண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

    ஆனாலும் கொரோனா குறைந்ததால் மெக்காவில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதனால் நேற்று முதல் புனித பயணம் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    ×