என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
செங்கடலில் இன்றும் டிரோன் மூலம் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
- கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை.
- எச்சரிக்கையை மீறி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
தெற்கு செங்கடல் வழியாக இன்று காலையில் சென்ற கப்பல் மீது ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காசா பகுதியில் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய போரையொட்டி கப்பல்களை குறிவைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், ஏமனின் ஹொடைடாவிற்கு மேற்கே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் கப்பலின் ஜன்னல்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டு உள்ளது என்று இங்கிலாந்து ராணுவ கடல்சார் அமைப்பு தெரிவித்தது
தாக்குதல் நடந்த கப்பல் இங்கிலாந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஆகும். பார்படோஸ் கொடியுடன் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக கப்பல் அருகே படகு ஒன்று சென்றுள்ளது. இதில் கப்பலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கப்பலில் சிறிய சேதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஏமனில் உள்ள ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.