search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    எகிப்து கடலில் சுறா தாக்கி 2 பெண்கள் பலி
    X

    கோப்பு படம்

    எகிப்து கடலில் சுறா தாக்கி 2 பெண்கள் பலி

    • எகிப்து ஹெர்ஹெடா மாகாணத்தில் செங்கடல் பகுதி அமைந்துள்ளது.
    • சுற்றுலா பயணிகள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கெய்ரோ:

    எகிப்து ஹெர்ஹெடா மாகாணத்தில் செங்கடல் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஷஹெல் ஹெஷ்ரிப் கடற்கரை சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது.

    இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது உண்டு. நேற்று விடுமுறையை கழிக்க பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக கடலில் இறங்கி குளித்தனர். சிலர் படகில் சென்று இயற்கை அழகை ரசித்தனர்.

    அப்போது கடலில் குளித்துக்கொண்டு இருந்தவர்களை சுறா திடீரென தாக்கியது. இதில் 2 பெண்கள் கடலுக்குள்ளே இறந்தனர். இதனால் அந்த பகுதி கடல் தண்ணீர் ரத்தமாக காட்சிஅளித்தது. மேலும் சிலர் சுறா தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த மற்ற சுற்றுலா பயணிகள் பயத்தால் அலறினார்கள். அவர்கள் அவசர, அவசரமாக நீச்சல் அடித்து கரைக்கு வந்தனர்.

    காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிசிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியை சுற்றி உள்ள கடற்கரைகளை 3 நாட்கள் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×