search icon
என் மலர்tooltip icon

    எகிப்து

    • 90-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் ஹமாஸ் கைவசம் உள்ளனர்.
    • அவர்களை மீட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.

    இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    அதேவேளையில் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களை மீட்கும் வரை தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    எகிப்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட மத்தியஸ்தரகாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒருவாரம் போர் நிறுத்தம் ஏற்பட்டது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவிக்கப்பட்டனர்.

    அதன்பின் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. தற்போது வரை சுமார் 100 பிணைக்கைதிகள் ஹமாஸிடம் உள்ளனர். கடந்த வாரம் இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் நான்கு பிணைக்கைதிகைள திரும்பப் பெறுவதற்கான போர் நிறுத்தத்தை எகிப்து பரிந்துரை செய்துள்ளது. நான்கு பிணைக்கைதிகளை திரும்பப் பெற இரண்டு நாட்கள் போர் நிறத்தத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை எகிப்பு அதிபர் அப்தெல்-ஃபத்தா-எல்-சிசி தெரிவித்துள்ளார்.

    நான்கு பிணைக்கைதிகளுக்காக இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். இரு தரப்பிலும் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் நான்கு பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

    • காசாவில் காஷ்மீரை சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்ற பெண்ணும், அவரது மகள் கரிமாவும் வசித்து வந்தனர்.
    • காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களிடம் தண்ணீர், மின்சாரம் அல்லது இன்டர்நெட் எதுவும் இல்லை.

    கெய்ரோ:

    இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் நிலை குலைந்திருக்கும் காசாவில் காஷ்மீரை சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்ற பெண்ணும், அவரது மகள் கரிமாவும் வசித்து வந்தனர்.

    போர் உக்கிரம் அடைந்ததை தொடர்ந்து தங்களை மீட்குமாறு மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இஸ்ரேல் மற்றும் எகிப்தின் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகங்கள் அவர்களை பத்திரமாக மீட்டன.

    இதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த 13-ந்தேதி காசா எல்லையை கடந்து எகிப்தின் கெய்ரோ சென்றடைந்தனர். தற்போது அங்கிருந்து காஷ்மீர் திரும்ப இருப்பதாக லுப்னா கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பி.டி.ஐ. நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'காசாவில் இருந்து ரபா எல்லை வழியாக பத்திரமாக வந்தோம். தற்போது காஷ்மீர் திரும்புவதற்காக காத்திருக்கிறேன்' என தெரிவித்தார்.

    காசா நிலவரம் குறித்து அவர் கூறும்போது, 'காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களிடம் தண்ணீர், மின்சாரம் அல்லது இன்டர்நெட் எதுவும் இல்லை. தொலைத்தொடர்பு மிகவும் மோசமாக இருந்தது. நாங்கள் அங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தோம். நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. தினம் தினம் செத்து மடிவோரும் உண்டு, காயம் அடைபவர்களும் உண்டு, இடிபாடுகளுக்கு அடியில் கிடப்பவர்களும் உண்டு' என பதறியடி கூறினார்.

    தன்னை மீட்டதற்காக மத்திய அரசுக்கும், இந்திய தூதரகங்களுக்கும் அவர் நன்றியும் தெரிவித்தார்.

    • எகிப்தில் கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
    • பெஹய்ரா பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    கெய்ரோ:

    எகிப்தில் உள்ள பெஹய்ரா பகுதியில் சென்று கொண்டிருந்த கார்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    காயம் அடைந்தவர்களை மீட்பதற்காக விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எகிப்தில் விபத்துகள் பெரும்பாலும் வேகம், மோசமான சாலைகள் அல்லது போக்குவரத்து சட்டங்களை சரியாக செயல்படுத்தாததால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    • காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது
    • எகிப்தில் இருந்து காசாவிற்கு மனிதாபிமான உதவி பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா முனையில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், தரைவழியாக தாக்குதல் நடத்தவும், தங்களை தயார் படுத்தி வருகிறது இஸ்ரேல்.

    காசா முனையைத் தவிர மேற்கு கரை, லெபனான் எல்லை ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரித்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் எகிப்து நாட்டின் தபா பகுதியில் உள்ள கட்டடம் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி, ஐந்து பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா முனையில் இருந்து எகிப்து எல்லையில் 200 கி.மீ. தொலைவில் உள்ள பகுதி தபா.

    இதற்கு முன்னதாக ஒருமுறை இஸ்ரேல் ஏவுகணை எகிப்து பகுதியை தவறுதலாக தாக்கியது. இந்த தாக்குதல் தவறுதலாக நடைபெற்றது என இஸ்ரேல் ராணுவம் உடனடியாக அறிவித்தது.

    ஆனால் தபா மீது ஏவுகணை தாக்குதல் நடைபெற்ற போதிலும், இஸ்ரேல் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    காசாவில் உள்ள மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என இஸ்ரேல் தெரிவித்தது. அதேபோல் பாலஸ்தீனத்தில் உள்ள அமைப்பும், நடத்தவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    எகிப்தில் இருந்து ரஃபா எல்லை வழியாக காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் தொடர் தாக்குதலால் காசாவிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது
    • ஜோ பைடன் கேட்டுக்கொண்டதன் பேரில் இஸ்ரேல், தடுக்கமாட்டோம் என உறுதி அளித்தது

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் இன்றுடன் 15-வது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எகிப்தில் இருந்து காசாவிற்கு செல்லும் ரஃபா பாதை மூடப்பட்டது.

    இதன் காரணமாக சுமார் 24 லட்சம் பேர் உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி தவித்தனர். காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு வலியுறுத்திய இஸ்ரேல், தாக்குதலை தொடர்ந்த வண்ணம் இருந்ததால், உதவிப் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை நீடித்தது.

    இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் சென்றிருந்தார். அப்போது இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். காசா மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதேபோல், எகிப்து அதிபரிடமும் இதுகுறித்து பேசினார்.

    பின்னர், உதவிப் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் இஸ்ரேல் ரஃபா பாதையை அனுமதிக்கும் எனக் கூறியிருந்தார். ஆனால், ரஃபா பாதையில் உள்ள சாலைகள் சேதமடைந்ததால் எப்போது உதவிப் பொருட்கள் செல்லும் என அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் தற்போது எகிப்தில் இருந்து காசாவிற்கு உதவிப் பொருட்களுடன் கனரக வாகனங்கள் ரஃபா பாதை வழியாக சென்று காசாவை அடைந்துள்ளன. இதன்மூலம் பரிதவித்து வரும் காசா மக்களுக்கு உதவிப் பொருட்கள் வினியோகிக்கப்பட இருக்கிறது.

    • அலெக்சாண்ட்ரியாவில் போம்பே தூண் எனும் பிரபலமான சுற்றுலா தலம் உள்ளது
    • காயமடைந்தவரை இஸ்ரேலுக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது

    மத்தியதரைக்கடல் பகுதியில் உள்ள அரபு நாடான எகிப்தின் முக்கிய சுற்றுலா நகரம் அலெக்சாண்ட்ரியா (Alexandria).

    கடற்கரை நகரமான அலெக்சாண்ட்ரியாவில் உள்ள பிரபலமான "போம்பே தூண்" (Pompey's Pillar) எனும் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்த ஒரு குழுவினரின் மீது அந்நாட்டு காவல்துறை அதிகாரி ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    இதில் 2 இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களும் ஒரு எகிப்து நாட்டை சேர்ந்தவரும் உயிரிழந்தனர்; மற்றொரு இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் காயமடைந்தார். அவரை இஸ்ரேலுக்கு அனுப்பும் முயற்சியில் எகிப்தும் இஸ்ரேலும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

    துப்பாக்கி சூடு நடத்திய அந்த அதிகாரி காவலில் எடுக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட அந்த சுற்றுலா பகுதியை காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

    சமூக வலைதளங்களில் இது குறித்து வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் சுடப்பட்ட இருவர் தரையில் கிடப்பதையும், அதில் ஒருவருக்கு தலையிலிருந்து ரத்தம் வெளியாவதும் காண முடிகிறது. சுற்றுலா குழுவை சேர்ந்த இஸ்ரேலி பெண்கள் "ஆம்புலன்ஸ், ஆம்புலன்ஸ்" என உரத்த குரலில் உதவி கேட்பதையும் காண முடிகிறது.

    நேற்று முன் தினம் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் தாக்குதல் நடத்தியதனால், பதிலடியாக இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதிக்குள் பெரும் தாக்குதல் வேட்டையை நடத்தி வருகிறது. இப்பின்னணியில், எகிப்தில் இஸ்ரேலியர் சுட்டு கொல்லப்பட்டுள்ளது உலகெங்கும் உள்ள இஸ்ரேலியர்களிடையே பதட்டத்தை அதிகரித்துள்ளது.

    • கெய்ரோவில் உள்ள மசூதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார்.
    • ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

    கெய்ரோ:

    பிரதமர் மோடி அமெரிக்க நாட்டுக்கு கடந்த 21-ம் தேதி முதல் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது அவர் வாஷிங்டனில் அமெரிக்க பாராளுமன்றத்தில் 2-வது முறையாக பேசி புதிய வரலாறு படைத்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அரசின் சார்பில் அவருக்கு பிரமாண்ட சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, பிரதமர் மோடி வாஷிங்டனில் இருந்து எகிப்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரை அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி, ஒரு சிறப்பு நிகழ்வாக விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். உலக போரின்போது வீர மரணம் அடைந்த 3,799 இந்திய படைவீரர்கள் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.

    மேலும், 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இந்தியாவைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டுள்ள அல்-ஹக்கீம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார். மசூதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார். அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து கெய்ரோவில் உள்ள மசூதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார்.

    பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருது என கூறப்படும் ஆர்டர் ஆப் தி நைல் விருது வழங்கி அந்நாட்டு அதிபர் சிசி கவுரவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்கா மற்றும் எகிப்து பயணங்களை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார்

    • எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
    • தாவூதி போரா சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டுள்ள அல்-ஹக்கீம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

    கெய்ரோ:

    பிரதமர் நரேந்திர மோடி எகிப்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரை அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    இந்நிலையில், எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். உலக போரின்போது வீர மரணம் அடைந்த 3,799 இந்திய படைவீரர்கள் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.

    மேலும், 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இந்தியாவைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டுள்ள அல்-ஹக்கீம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார். மசூதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார். அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    • 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை.
    • அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    கெய்ரோ:

    பிரதமர் மோடி எகிப்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரை அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

    26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். உலகப் போரின்போது வீர மரணம் அடைந்த 3,799 இந்திய படைவீரர்கள் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.

    மேலும், 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இந்தியாவைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டுள்ள அல்-ஹக்கீம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார். மசூதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார். அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்நிலையில், எகிப்து அதிபர் அப்துல் பத அல் சிசியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    அதன்பின், எகிப்து அதிபர் அப்துல் பதா அல் சிசி பிரதமர் மோடிக்கு ஆர்டர் ஆப் தி நைல் விருதை வழங்கி கவுரவித்தார்.

    • பிரதமர் மோடியை யோகா பயிற்சியாளர்களான ரீம் ஜபக், நாடா அடெல் ஆகியோர் சந்தித்து பேசினர்
    • இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்

    பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து நாட்டுக்கு சென்றார். எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்சிசி அழைப்பின் பேரில் அரசு முறை பயணத்தை மேற்கொண்டார். நேற்று தலைநகர் கெய்ரோவுக்கு சென்ற பிரதமர் மோடியை எகிப்து பிரதமர் முஸ்தபா மட்புலி வரவேற்றார்.

    பிரதமர் மோடி எகிப்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார். மிகப்பெரிய எகிப்திய நிறுவனங்களில் ஒன்றான ஹசன் ஆலம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹசன் ஆலம் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பிரதமர் மோடியை யோகா பயிற்சியாளர்களான ரீம் ஜபக், நாடா அடெல் ஆகியோர் சந்தித்து பேசினர். அதேபோல் முக்கிய நிறுவன அதிகாரிகளையும் மோடி சந்தித்தார்.

    எகிப்தின் தலைமை முப்தி ஷவ்கி இப்ராஹிம் அப்தெல், கரீம் அல்லாமையும் மோடி சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே எகிப்து பிரதமர் முஸ்தபா மட்புலி மற்றும் உயர்மட்ட கேபினட் அமைச்சகர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவது, இரு நாட்டு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.

    பின்னர் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ரிட்ஸ் கார்ல்டன் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தேசிய கொடியை அசைத்து மோடியை பார்த்து வந்தே மாதரம் கோஷங்களை எழுப்பினர்.

    ஜெனா என்ற எகிப்தியப் பெண், சேலை அணிந்து வந்திருந்தார். அவர் ஷோலே இந்தி திரைப்படத்தின் பிரபல பாடலை மோடியிடம் பாடி காட்டினார்.

    அப்போது அப்பெண்ணிடம் மோடி, நீங்கள் எகிப்தின் மகளா அல்லது இந்தியாவின் மகளா என்பதை யாராலும் சொல்ல முடியாது என்றார்.

    பின்னர் இந்தியாவை சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினர் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது ஒருவர் மோடியிடம், நீங்கள் இந்தியாவின் ஹீரோ என்று பாராட்டினார்.

    இதற்கு மோடி கூறும்போது, இந்தியா முழுவதும் அனைவரும் ஹீரோக்கள்தான். நாட்டு மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். இதனால் தேசம் முன்னேறுகிறது. இது உங்கள் கடின உழைப்பின் பலன் என்றார்.

    இந்த நிகழ்ச்சி தொடர்பாக மோடி டுவிட்டரில் கூறும்போது, எகிப்தில் உள்ள புலம் பெயர்ந்த இந்தியர்களின் அன்பான வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்களின் ஆதரவும், பாசமும் நம் தேசங்களின் காலத்தால் அழியாத பிணைப்பை உண்மையாகவே உணர்த்துகின்றன. எகிப்தியர்கள் இந்திய ஆடைகளை அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. உண்மையாகவே இது நமது பகிரப்பட்ட கலாச்சார இணைப்புகளின் கொண்டாட்டம் என்றார்.

    பிரதமர் மோடி இன்று எகிப்து அதிபர் அப்தெல் பட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    • பிரதமர் மோடி 5 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா, எகிப்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
    • எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்கா பாராளுமன்றத்திலும் சிறப்புரை ஆற்றினார்.

    இதற்கிடையே, அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டுச் சென்றார்.

    இந்நிலையில், எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் எகிப்து பிரதமர் முஸ்தபா மாட்போலி உற்சாகமாக வரவேற்றார்.

    எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியை சந்தித்து பேச உள்ளார்.
    • கெய்ரோவில் உள்ள போர் நினைவிட கல்லறையை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்ற மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கு அவர் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி, இரு தரப்பு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்க பாராளுமன்ற கூட்டமர்வில் உரையாற்றினார். வெள்ளை மாளிகையில் அதிபர் விருந்து அளித்து கவுரவித்தார்.

    இந்நிலையில் அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர், 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டு சென்றார்.  பிரதமராக பதவி ஏற்ற பிறகு எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியை சந்தித்து பேச உள்ளார். இதுதவிர எகிப்து அரசின் மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்திய சமூகத்தினரையும் மோடி சந்திக்க உள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் எகிப்து அதிபரின் அரசுமுறைப் பயணத்தின் போது, இரு நாடுகளும் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

    இந்த சுற்றுப்பயணத்தின்போது கெய்ரோவில் உள்ள ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறைத் தோட்டத்தை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இது முதல் உலகப் போரின்போது எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் போரிட்டு உயிரிழந்த 4,000 இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடமாக உள்ளது. உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த உள்ளார்.

    ×