என் மலர்
உலகம்
நிலவை துல்லியமாக படம் பிடித்த வானிலை நிபுணர்
- நிலவில் என்ன இருக்கிறது என்பதை அறிய எல்லோருக்கும் ஆசை இருக்கும்.
- சூரியனால் ஒளிரும் பகுதியை மிகவும் தெளிவாக காட்டுகிறது.
வாஷிங்டன்:
நிலவில் என்ன இருக்கிறது என்பதை அறிய எல்லோருக்கும் ஆசை இருக்கும். அதை அறியும் வகையில் வானியல் நிபுணர் ஒருவர் துல்லியமாக நிலவை படம்பிடித்து உள்ளார். 8 அங்குல தொலைநோக்கி மூலம் அவர் இதனை மிக அழகாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
பூமியில் இருந்து வெறும் கண்ணால் பார்க்கும் போது நிலவு வெண்மையாகவும். சாம்பல் நிறமாகவும் காட்சி அளிப்பதுபோன்று தெரியும் ஆனால் இந்த படத்தின்படி அது அப்படி இல்லை என்பது தெரியவருகிறது.
மேலும் சூரியனால் ஒளிரும் பகுதியை மிகவும் தெளிவாக காட்டுகிறது. அதில் எண்ணற்ற மாற்றங்கள் மற்றும், முகடுகள் இருப்பது தெரியவருகிறது.
இதனை இணையதளத்தில் ஏராளமானோர் பார்த்து பாராட்டி வருகின்றனர். இதில் ஒருவர் இது போன்ற அழகான நிலவின் படத்தை இதற்கு முன் பார்த்தது இல்லை என்றும் இது பிரமிக்க வைக்கிறது என்றும் தெரிவித்து உள்ளார்.