என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
அமேசான் நிறுவனத்தில் மேலும் 18 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்- புதிய அறிவிப்பால் அதிர்ச்சி
BySuresh K Jangir5 Jan 2023 9:43 AM GMT
- தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழ்நிலையை எதிர்கொள்வது சவாலாக உள்ளது.
- பணி நீக்கமானது இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
வாஷிங்டன்:
கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான் நிறுவனமும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.
இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் தலைமை செயலாளர், ஊழியர்களுக்கு இன்று காலை ஒரு செய்தி அனுப்பி உள்ளார். அதில், தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழ்நிலையை எதிர்கொள்வது சவாலாக உள்ளது. இதனால் மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது.
இந்த பணி நீக்கமானது இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது அந்த நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
Next Story
×