என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
சீனா வெளியிட்ட புதிய வரைபடம்- அருணாச்சல பிரதேச விவகாரத்தில் 4 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு
- புதிய வரைபடத்தை சீனா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
- அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தம் என இந்தியா தெரிவித்துள்ளது.
பிஜிங்:
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் அகாசி சின் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் சீனா கூறி வருகிறது. இது தொடர்பான புதிய வரைபடத்தை சீனா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
ஆனால் அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தம் என இந்தியா தெரிவித்துள்ளது. சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் தைவானையும் தன் நாட்டின் ஒரு பகுதி என சீனா தெரிவித்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் 80 சதவீதம் சீனாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது என சீனா சொல்லி வருகிறது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த 4 நாடுகளும் அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இந்த வரை படம் செல்லாது என வியட்நாம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாடும் நாங்கள் ஒரு போதும் சீனாவின் புதிய வரைபடத்தை ஏற்க முடியாது என தெரிவித்து உள்ளது.