search icon
என் மலர்tooltip icon

    சீனா

    • மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு பணக்கார குடும்பத்திற்கு கடத்தல் கும்பலால் விற்கப்பட்டடார்.
    • பெரும் போராட்டங்களுக்கு நடுவே குடும்பதை தேடுவதை நிறுத்தாத யூ ஒரு கட்டத்தில் தனது பிறந்த குடும்பத்தை கண்டுபிடித்தார்.

    34 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்த சீன நபர், ஒரு வருடத்திற்குப் பிறகு உறவைத் துண்டிக்க முடிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    37 வயதான யூ தனது பிறந்த குடும்பத்தை கண்டுபிடித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் அவரது உண்மையான பெயரைக் கண்டுபிடிக்கும் வரை 34 ஆண்டுகளாக லி கியாங் என்று அழைக்கப்பட்டார். அவர் இரண்டு வயதாக இருந்தபோது சிச்சுவான் மாகாணத்தில் உள்ள அவரது தாத்தா பாட்டி வீட்டில் இருந்து கடத்தப்பட்டு, மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு பணக்கார குடும்பத்திற்கு கடத்தல் கும்பலால் விற்கப்பட்டடார்.

    அங்கு பல்வேறு கொடுமைகளை அனுபவித்த யூவுக்கு ஐந்து வயதில் தத்தெடுக்கப்பட்டதாகவும், 11 வயதில் அவரை வேறொரு குடும்பத்திற்கு அனுப்பியதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அக்குடும்பத்தை விட்டு வெளியேறிய யூ டெலிவரி ரைடராக வாழ்க்கை நடத்தி வந்தார்.

    பெரும் போராட்டங்களுக்கு நடுவே குடும்பதை தேடுவதை நிறுத்தாத யூ ஒரு கட்டத்தில் தனது பிறந்த குடும்பத்தை கண்டுபிடித்தார். குடும்பத்தை கண்டுபிடித்த உடன் அவரது முதல் ஆசை அவரது தாயின் மடியில் "நன்றாக தூங்க வேண்டும்" என்பது தான்... ஆனால் குடும்பத்துடன் சேர்ந்த யூ-வுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.

    தனது தாய் தனது மற்ற இரண்டு மகன்களிடம் ஒரு சார்புடையவராக இருப்பதை உணர்ந்து ஏமாற்றமடைந்ததாக கூறும் யூ அவரை பணத்திற்காக தொடர்ந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி குடும்பத்தை விட்டு பிரிவதாக கூறியுள்ளார்.

    மேலும் பணத்தைச் சேமிக்க விரும்புவதாகவும், தனது வாழ்க்கையில் துன்பத்தை ஏற்படுத்திய கடத்தல்காரர்களைக் கண்டுபிடித்து அவர்களை நீதியின் முன் நிறுத்த விரும்புவதாகவும் யூ கூறினார்.

    • இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உட்பட 35 நாடுகளை சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம்.
    • விசா இல்லாமல் பயணிப்பதால் 15 நாட்கள் மட்டுமே சீனாவிற்குள் இருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்று கொள்ளலாம். 

    அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது. நமது அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உட்பட 35 நாடுகளை சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது.

    இதேபோல் நமது அண்டை நாடான சீனாவும் புதிதாக 9 நாடுகள் விசா இல்லாமல் அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது. 

    தென்கொரியா, நார்வே, பின்லாந்து , ஸ்லோவாக்கியா, டென்மார்க், ஐஸ்லாந்து, அன்டோரா, மொனாக்கோ மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் சீனாவிற்குள் வணிகம், சுற்றுலா, குடும்ப உறுப்பினர்களை பார்ப்பதற்காக விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விசா இல்லாமல் பயணிப்பதால் 15 நாட்கள் மட்டுமே சீனாவிற்குள் இருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்த புதிய நடைமுறை 2025 டிசம்பர் 31 வரை தான் அமலில் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று அதிகாலை ஷென்சோ-19 விண்கலத்தில் புறப்பட்டனர்.
    • 3 விண்வெளி வீரர்களும் 6 மாதம் தங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ளனர்.

    சீனா, சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளது. இந்த நிலையில் விண்வெளி நிலையத்துக்கு முதல் பெண் விண்வெளி என்ஜினீயர் உள்பட 3 விண்வெளி வீரர்களை சீனா அனுப்பியது. அவர்கள் இன்று அதிகாலை ஷென்சோ-19 விண்கலத்தில் புறப்பட்டனர்.

    இந்த விண்கலம் வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து லாங் மார்ச்-2எப் கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஷென்சோ-19 விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்து நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 விண்வெளி வீரர்களும் 6 மாதம் தங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ளனர்.

    • நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷிய வீராங்கனை ஆண்ட்ரிவா தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மீரா ஆண்ட்ரிவா, சக நாட்டு வீராங்கனை டேரியா கசட்கினா உடன் மோதினார்.

    இதில் கசட்கினா முதல் செட்டை 6-0 என கைப்பற்றினார். 2வது செட்டை ஆண்ட்ரிவா 6-4 என கைப்பற்றினார்.

    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை கசட்கினா 6-4 என வென்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

    • நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் செக் வீராங்கனை முச்சோவா போட்டியில் இருந்து விலகினார்.

    பீஜிங்:

    நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரஷியாவின் மீரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.

    இதில் முச்சோவா முதல் செட்டை 2-6 என இழந்தார். 2வது செட்டில் 0-1 என இருந்த நிலையில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஆண்ட்ரிவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, ரஷியாவின் டேரியா கசட்கினா உடன் மோதினார்.

    இதில் படோசா 4-6 என முதல் செட்டை இழந்த நிலையில் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, கசட்கினா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனைகள் ஆண்ட்ரிவா, கசட்கினா மோதுகின்றனர்.

    • தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது
    • லடாக் எல்லையில் சீனா தங்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது

    இந்தியவனுடன் தைவான் நெருக்கம் காட்டுவதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி, சென்னையை தொடர்ந்து தற்போது மும்பையிலும் தைவான் தூதரக அலுவலகத்தை திறந்துள்ளது.

    தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் இந்தியாவுடனான தொடர்பைத் தைவான் வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நியாங், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியான தைவானுடன் எந்தவொரு அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் இந்தியா தவிர்க்க வேண்டும். பீஜிங் உடன் தூதரக உறவு வைத்துள்ள நாடுகள், தைவானுடன் அலுவலக உறவை ஏற்படுத்துவது கூடாது.

    சீன-இந்திய உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில், இவ்விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். லடாக் எல்லையில் சீனா தங்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் செக் வீராங்கனை முச்சோவா வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 2-6 என இழந்த முச்சோவா, அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரேசில் வீராங்கனை ஹதாத் மையா உடன் மோதினார்.

    இதில் படோசா 6-3, 6-2 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரோமானியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார்.

    இதில் முச்சோவா 6-2, 6-1 என எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, சீன வீராங்கனை வாங் ஜி யு உடன் மோதினார். இதில் படோசா முதல் செட்டை 6-7 (4-7)இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட படோசா அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இந்த கிராமத்தில் 70 நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
    • பயன்படுத்தப்படாத இந்த பகுதிகளில் மக்களைக் குடியேற்ற சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்தியாவின் எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றசாட்டுகள்  இருந்துவரும் நிலையில் தற்போது எல்லையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் ஏறியின் [Pangong Lake] குறுக்கே பாலம் ஒன்றையும் சீனா கட்டி முடித்தது. இதில் சீன ராணுவ வாகனங்கள் பயணிக்கும் சாட்டிலைட் ஆதாரங்கள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மேக்சார் தொழில்நுட்ப நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தின்படி பான்காங் ஏரியின் வடக்கே, புதிய கிராமம் ஒன்றையே சீனா உருவாக்கியுள்ளது. 

     

    எல்லையில் இருந்து 36 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 70 நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் 6 - 8 ராணுவ வீரர்கள் தங்க முடியும். மேலும் இந்த பகுதியைச் சுற்றிய ராணுவ கட்டமைப்பையும் சீனா வலுப்படுத்தி வருகிறது. இந்த கிராமத்தை விரிவுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன் பயன்படுத்தப்படாத இந்த பகுதிகளில் மக்களைக் குடியேற்ற சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    மேலும் அவசியம் ஏற்பட்டால் ராணுவ தளமாகவும் சீனா இதைப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. பாங்கோங் ஏரி அருகே மொத்தமாக 17 ஹெக்டேர் அளவுக்குச் சீன கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 4,347 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த 2020 வாக்கில் பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது குறிப்பிடத்தக்கது. 

     

    • வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இறுதிப் போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார்.

    பீஜிங்:

    வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் சபலென்கா 6-3, 5-7, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதன்மூலம் வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா அசத்தியுள்ளார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச்சும் இத்தாலி வீரரான ஜன்னிக் சின்னரும் மோதினர்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரரான ஜன்னிக் சின்னர் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் சின்னர் 7-6 (7/4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். 

    • வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 1-6 என இந்த சபலென்கா அடுத்த இரு சுற்றுகளை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங், சகநாட்டு வீராங்கனை வாங் சின்யு உடன் மோதினார். இதில் ஜெங் 6-3, 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சபலென்கா, ஜெங்கை எதிர்கொள்கிறார்.

    ×