என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
இத்தாலியில் தொடர்ந்து சரியும் பிறப்பு விகிதம்- வெளிநாட்டவர்களின் குடியேற்றம் உயர்வு
Byமாலை மலர்31 March 2024 8:30 AM IST
- கடந்த 2022-ல் குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது.
- சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரோம்:
ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதுதொடர்பாக அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி கடந்த 2022-ல் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது. இதன்மூலம் சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் வெளிநாடுகளில் இருந்து இத்தாலிக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி அங்கு குடியேறி உள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 53 லட்சமாக உயர்ந்துள்ளது. எனினும் மக்கள்தொகை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த அவர்கள் உதவியாக இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.
Next Story
×