என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
இயல்பு நிலை திரும்புகிறது: இலங்கையில் அவசர நிலை வாபஸ்- ரணில் விக்ரமசிங்கே தகவல்
- அதிபர் மாளிகை எதிரே காலி முகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் கூடாரங்கள் அகற்றப்பட்டன.
- ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த அவசர நிலை நாளையுடன் காலாவதியாகிறது.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளி நாட்டுக்கு தப்பி சென்றார்.
இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 21-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து இலங்கையில் அவசர நிலையை பிரகடனப் படுத்துவதாக ரணில் விக்ரம சிங்கே அறிவித்தார்.
மேலும் அதிபர் மாளிகை எதிரே காலி முகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதற்கிடையே காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.
இதற்கிடையே ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த அவசர நிலை நாளையுடன் காலாவதியாகிறது. இந்த நிலையில் அவசர நிலை வாபஸ் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிபர் அலுவலகம் தரப்பில் கூறியதாவது:-
நாட்டின் நிலைமை நிலையான வகையில் இருப்பதால் அரசுக்கு எதிராக போராட்டங்களை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அவசரகால சட்டம் நீட்டிக்கப்படமாட்டாது.
இந்த வாரத்தில் அவசர கால சட்டம் காலாவதி யாகும் நிலையில் மீண்டும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது. அதிபர் ரணில் விக்ரசிங்கே அவசர கால சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும். தற்போது நாடு, ஸ்திரமான நிலையில் இருப்பதால் அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசிய மில்லை என்றார்.