என் மலர்
உலகம்
சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளில் பிறந்த குழந்தையை தத்தெடுத்த உறவினர்கள்
- குழந்தையின் தந்தை மற்றும் 4 சகோதர, சகோதரிகள் உயிரிழந்தனர்.
- பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்டது. இந்த குழந்தையை தத்தெடுக்க உலகம் முழுவதும் பலர் விரும்பினர்.
துருக்கி-சிரியாவில் கடந்த 6-ந்தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்தன. நிலநடுக்க பலி எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியது. வடமேற்கு சிரியாவில் நிலநடுக்கத்துக்கு இடையே பிறந்த பெண் குழந்தையை இடிபாடுகளில் இருந்து மீட்டனர்.
இட்லிப் மாகாணம் ஜின்டாய்ரிசில் அந்த குழந்தையை பெற்றெடுத்த தாய் உயிரிழந்தார். பின்னர் நிலநடுக்கத்தால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
இதில் குழந்தையின் தந்தை மற்றும் 4 சகோதர, சகோதரிகள் உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்டது. இந்த குழந்தையை தத்தெடுக்க உலகம் முழுவதும் பலர் விரும்பினர்.
இந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அந்த குழந்தையை உறவினர்கள் தத்தெடுத்தனர். குழந்தையின் தந்தை வழி அத்தை ஹலா, மாமா கலீல்-அல் சவாதி ஆகியோர் தத்தெடுத்துள்ளனர். குழந்தைக்கு அதனுடைய தாயின் பெயரான அப்ரா என்று பெயரிட்டனர். டி.என்.ஏ. சோதனை மற்றும் சட்டப்பூர்வ நடைமுறைக்கு பிறகு குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.