என் மலர்
உலகம்
X
திபெத்-தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்
BySuresh K Jangir7 April 2023 10:52 AM IST
- தெற்கு திபெத் நாட்டில் உள்ள ஜிஜாங் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
ஜிஜாங்:
தெற்கு திபெத் நாட்டில் உள்ள ஜிஜாங் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 4.6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
இதே போல தஜிகிஸ்தான் நாட்டிலும் இன்று அதிகாலை 3.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.பூமிக்கடியில் 150 கிலோ மீட்டர் ஆழத்தில் இது உருவானது. ரிக்டர் அளவு கோலில் இது 4.1 ஆக பதிவாகி இருந்தது. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
Next Story
×
X