என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
மாலத்தீவு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது
- பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் லட்சத்தீவு சென்றிருந்த போது அவரது பயணத்தை மாலத்தீவு மந்திரிகள் கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டனர்.
- இந்தியர்கள் வருகை தற்போது குறைந்துள்ளதால் தற்போது 5 - வது இடத்துக்கு சென்றுவிட்டது. இதனால் மாலத்தீவு அரசு கவலை அடைந்துள்ளது.
மாலே:
நமது அண்டை நாடான மாலத்தீவு சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இயற்கை அழகு கொட் டிக்கிடக்கும் மாலத்தீவுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்வார்கள்.சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி தான் அந்த நாடு உள்ளது.ஆனால் சமீபத்தில் மாலத்தீவு அதிபராக சீன ஆதரவாள ரான முகமது முஸ்சு பதவி ஏற்ற பிறகு இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.
மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
மேலும் பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் லட்சத்தீவு சென்றிருந்த போது அவரது பயணத்தை மாலத்தீவு மந்திரிகள் கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் 3 மந்திரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த பிரச்சினைக்கு பிறகு மாலத்தீவு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. கடந்த ஆண்டு மாலத்தீவுக்கு மொத்தம் 17 லட்சம் சுற்றுலா பயணிகள் சென்றனர். இதில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 198 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.
அதற்கு அடுத்த இடத்தில் ரஷியா மற்றும் சீனர்கள் இருந்தனர். இந்த நிலையில் இந்தியர்கள் வருகை தற் போது குறைந்துள்ளதால் தற்போது 5 - வது இடத் துக்கு சென்று விட்டது. இதனால் மாலத்தீவு அரசு கவலை அடைந்துள்ளது.
இதையடுத்து இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க மாலத்தீவை சேர்ந்த சுற்றுலா அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் வாகனங்களில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாலத்தீவு சுற்றுலா குறித்த முக்கிய அம்சங்கள் மற்றும் பயணங்களை எளிதாக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் இடம் பெறும் வகையில் இந்த ரோடு ஷோ நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக அவர்கள் மாலத்தீவு தலைநகர் மாலேவில் இந்திய அதிகாரி முனு மஹாவரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இந்தியர்கள் வருகையை அதிகரிக்க எடுக்கப்படும் முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்