search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    ஈராக்-சிரியாவில் துருக்கி வான்வழித் தாக்குதல்
    X

    ஈராக்-சிரியாவில் துருக்கி வான்வழித் தாக்குதல்

    • துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
    • 5 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர்.

    அங்காரா:

    துருக்கி தலைநகர் அங்காராவில் அரசுக்கு சொந்தமான ராணுவ மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் நேற்று துப்பாக்கியுடன் புகுந்த ஒரு ஆண், ஒரு பெண் தாக்குதல் நடத்தினர்.

    துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் குர்திஷ் படைகள் நடத்தியதாக துருக்கி தெரிவித்தது.

    இந்த நிலையில் ஈராக், சிரியாவில் குர்திஷ் போராளிகள் படைகள் மீது துருக்கி பதிலடி தாக்குதலை நடத்தியது. வடக்கு ஈராக் மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் படைகள் முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

    துருக்கி போர் விமானங்கள் குண்டுகளை வீசியது. இதில் குர்திஷ் படையினரின் 32 முகாம்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், குர்திஷ் படையை சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    தாக்குதல் குறித்த விவரங்களை துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை. ஆனால் குர்திஷ் இலக்குகள் எதிர் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

    Next Story
    ×