search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்காக 6 ஆயிரம் குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் ஏற்பாடு
    X

    உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்காக 6 ஆயிரம் குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் ஏற்பாடு

    • தினமும் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கடும் வெயிலில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும்.
    • டெலிவரி செய்யும் ஊழியர்கள் வெயில் காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஓய்வறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அமீரகத்தில் தற்போது கோடைக்காலம் காரணமாக சுட்டெரிக்கும் வெயில் நிலவுகிறது. இதனை கவனத்தில் கொண்டு மோட்டார் சைக்கிளில் டெலிவரி செய்யும் ஊழியர்களின் உடல்நலன் கருதி அவர்கள் ஓய்வெடுப்பதற்கு வசதியாக அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் 6 ஆயிரம் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துபாயில் இந்த ஓய்வெடுக்கும் அறைகள் அரேபியன் ரேஞ்சஸ், இன்டர்நேசனல் சிட்டி, பிசினஸ் பே, அல் கூஸ், அல் கராமா, அல் சத்வா, அல் ஜதாப் மற்றும் மிர்திப் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் 24 மணி நேரமும் சுய சேவை முறையில் செயல்படுகிறது.

    இந்த அறைகள் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஓய்வறையில் அமரும் இருக்கைகள், குளிர்ந்த தண்ணீர், செல்போன் சார்ஜ் ஏற்றும் வசதி, காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் தயாரிக்கும் எந்திரம், சிற்றுண்டி வினியோகம் ஆகிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் நிழலான பகுதியில் மோட்டார் சைக்கிள்களை வரிசையில் நிறுத்திக்கொள்ளலாம். இடத்தை பொறுத்து இந்த அறையில் ஒரே நேரத்தில் 10 பேர் வரை ஓய்வெடுக்கலாம்.

    கடும் கோடை நிலவும் நேரத்தில் அல்லது ஆர்டருக்காக காத்திருந்து மிகவும் சோர்வடையும்போது டெலிவரி ஊழியர்கள் இங்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லலாம். இதன் மூலம் களைப்பு மற்றும் சோர்வு நீக்கப்பட்டு சாலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் பயனுள்ளதாக உள்ளது.

    இந்த வசதி துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் டெலிவரியில் ஈடுபட்டு வரும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளது. அமீரகத்தில் கட்டாய மதிய இடைவேளை வருகிற 15-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 15-ந்தேதி வரை நடைமுறைக்கு வருகிறது.

    தினமும் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கடும் வெயிலில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். இந்த நேரங்களில் டெலிவரி செய்யும் ஊழியர்கள் வெயில் காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஓய்வறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×