search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தீவிரமடையும் போர்- தெற்கு காசாவின் முக்கிய நகரை சுற்றி வளைத்தது இஸ்ரேல் ராணுவம்
    X

    தீவிரமடையும் போர்- தெற்கு காசாவின் முக்கிய நகரை சுற்றி வளைத்தது இஸ்ரேல் ராணுவம்

    • இஸ்ரேல் துருப்புகள் மற்றும் டாங்கிகள் கடலோர காசா பகுதி எல்லை வேலி வழியாக கான்யூனுஸ் நகருக்குள் நுழைந்து வருகின்றன.
    • கான்யூனுஸ் பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் எச்சரிக்கை துண்டு பிரசுரங்கள் வீசப்படுகின்றன.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

    வடக்கு காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பகுதி முற்றிலும் சின்னா பின்னாமாகி உள்ளது. இதற்கிடையே தெற்கு காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்தது.

    அங்குள்ள மக்கள் இடம் பெயர இஸ்ரேல் வலியுறுத்தியது. அதன்படி தெற்கு காசாவில் இஸ்ரேல் தீவிர தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. அங்குள்ள முக்கிய நகரங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. தரைப்படை வீரர்களும் முன்னேறி வருகிறார்கள்.

    இந்நிலையில் தெற்கு காசாவின் முந்தய நகரமான தான் யூனிசை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் தளபதி ஜெனரல் பிங்கெல் மேன் கூறுகையில்ற, "தரைப்படை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து நாங்கள் மிகவும் தீவிரமான நிலையில் இருக்கிறோம். தெற்கு காசாவில் உள்ள முக்கிய நகரமான கான் யூனுசை முற்றிலும் சுற்றி வளைத்து உள்ளோம். அந்த நகரின் மையப்பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் செயல்பட்டு வருகிறது.

    ஏற்கனவே வடக்கு காசாவில் ஜபாலியா, ஷுஜாய் பகுதிகளில் சண்டையிட்டு வருகிறோம். வடக்கு காசா பகுதியில் பல ஹமாஸ் கோட்டைகளை கைப்பற்றினோம். தற்போது தெற்கில் ஹமாசின் கோட்டை நகருக்கு எதிராக செயல்பட்டு வருகிறோம்" என்றார்.

    இஸ்ரேல் துருப்புகள் மற்றும் டாங்கிகள் கடலோர காசா பகுதி எல்லை வேலி வழியாக கான்யூனுஸ் நகருக்குள் நுழைந்து வருகின்றன.

    கான்யூனுஸ் பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் எச்சரிக்கை துண்டு பிரசுரங்கள் வீசப்படுகின்றன. அதில், "உங்கள் பாதுகாப்புக்காக நீங்கள் இருக்கும் தங்குமிடங்களிலும், மருத்துவமனைகளிலும் இருங்கள். வெளியே வராதீர்கள். வெளியே செல்வது ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் போர் முடிந்த பிறகு காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் கையாளும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "போருக்கு பிறகு காசா பகுதியில் பாதுகாப்பை இஸ்ரேல் மட்டுமே கையாள முடியும். காசாவில் ராணுவமற்ற மண்டலத்தை உருவாக்க இஸ்ரேல் படை செய்யும். இதை செய்யக்கூடிய ஒரே சக்தி இஸ்ரேல்தான். காசா பகுதியின் ராணுவ மயமாக்கலுக்கான எந்தவொரு சர்வதேச சக்தியையும் அல்லது முயற்சியையும் நான் நம்பவில்லை.

    ஹமாசின் ராணுவ மற்றும் அரசியல் திறன்களை முற்றிலுமாக அகற்றி இஸ்ரேலுக்கு எதிர்காலத்தில் காசா பகுதியில் இருந்து எந்த அச்சுறுத்தலும் வராது என்பதை உறுதிப்படுத்துவோம். தற்போது காசாவில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் அனைவரையும் மீட்போம்" என்றார்.

    Next Story
    ×