search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மீண்டும் பெருந்தொற்றை சந்திக்க நேரிடுமா? உலக சுகாதார மைய தலைவர் சொல்வது என்ன...
    X

    உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மீண்டும் பெருந்தொற்றை சந்திக்க நேரிடுமா? உலக சுகாதார மைய தலைவர் சொல்வது என்ன...

    • 69 லட்சம் பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
    • உருமாற்றம் அடைந்து கொண்டு வருவதால் இதுவரை தொற்று முடிவுக்கு வரவில்லை.

    கொரோனா... இந்த வார்த்தையை கேட்டாலே பயப்படாத யாவரும் இல்லை எனலாம்... 21-ம் நூற்றாண்டில் உலகத்தையே புரட்டிப்போட்ட மிகப்பெரிய கொடூர தொற்றாகும்.

    முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டு உலகத்தையே அஞ்ச வைத்தது. ஒட்டுமொத்த உலக மக்களையும் வீட்டிற்குள்ளேயே முடக்கியது. உலக பொருளாதாரம் தலைகீழாக சென்றது.

    இதுவரை உலக அளவில் 68,12,24,038 மக்களை கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது. 68,81,401 பேர் உயிரை குடித்துவிட்டது.

    தற்போது உலகம் சகஜ நிலைக்கு வந்துவிட்டாலும், கொரோனா முடிவுக்கு வரவில்லை. உருமாற்றம் அடைந்து அச்சுறுத்தியே வருகிறது.

    இந்த நிலையில் மீண்டும் உலகம் ஒரு பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டியது தேவை என உலக சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த பெருந்தோற்றுக்கு தயாராக வேண்டியது தேவை. இது கொரோனா பெருந்தொற்றைவிட கொடியதாக இருக்கும்.

    கொரோனா உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவு என்பது உலகளாவிய கொரோனா சுகாதார அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தது என்பதில்லை.

    நோய் மற்றும் மரணத்தின் அளவை அதிக அளவில் ஏற்படுத்தும் மற்றொரு உருமாற்றம் அச்சுறுத்தல் உள்ளது. அடுத்த தொற்று நம் கதவை தட்டும்போது ஒன்றாக இணைந்து அதை எதிர்கொள்வதற்கு நாம் தயராக இருக்க வேண்டும்.

    76-வது உலக சுகாதார மாநாட்டில் டெட்ரோஸ் அதனோம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×