என் மலர்tooltip icon

    உலகம்

    மே 9 வெற்றி அணிவகுப்பு.. பிரதமர் மோடிக்கு ரஷியா அழைப்பு
    X

    மே 9 வெற்றி அணிவகுப்பு.. பிரதமர் மோடிக்கு ரஷியா அழைப்பு

    • மே 9, 1945 அன்று ஜெர்மனி, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனிடம் சரணடைந்தது.
    • ரஷியாவின் மிக முக்கியமான வருடாந்திர கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.

    இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 9 அன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க ரஷியா அழைப்பு விடுத்துள்ளது.

    மே 9, 1945 அன்று ஜெர்மனி, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனிடம் சரணடைந்ததை நினைவுகூரும் வகையிலான இந்த வெற்றி தின அணிவகுப்பு, ரஷியாவின் மிக முக்கியமான வருடாந்திர கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.

    இந்நிலையில் இந்த அணிவகுப்புக்கு அழைப்புக் கடிதத்தை இந்திய பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக ரஷிய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

    மேலும் பிற நட்பு நாடுகளுக்கும் அழைப்புக் கடிதம் பறந்துள்ளது. பிரதமர் மோடி கடைசியாக 22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டுக்காக ஜூலை 2024 இல் ரஷ்யாவிற்கு விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×