search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மின்கம்பி அறுந்து விழுந்து கல்லூரி மாணவி உட்பட 4 பேர் படுகாயம்
    X

    மின்சார கம்பி அறுந்து விழுந்து பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் சேதராப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்ட காட்சி.

    மின்கம்பி அறுந்து விழுந்து கல்லூரி மாணவி உட்பட 4 பேர் படுகாயம்

    • துணியை காய வைக்க சென்ற பொது மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்தார்.
    • இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடி யாக போலீசாருக்கும் மின்சார துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த கரசூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி இவரின் வீட்டின் எதிரே உள்ள மின்சார ஒயர் கம்பி நேற்று இரவு வீசிய சூறைக்காற்றில் அறுந்து விழுந்தது.

    இந்நிலையில் மணி என்பவர் வீட்டுக்கு எதிரில் இருந்த மின்கம்பத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியவில்லை.

    மணியின் மனைவி தனம் (வயது 45) துணியை துவைத்து மின் கம்பம் அருகே கட்டப்பட்டிருந்த கொடியில் துணியை காய வைக்க சென்ற பொது மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்தார்.

    அதனைப் பார்த்த அவரது மகள் பிரியதர்ஷினி (வயது 19) தனத்தை இழுக்க முயற்சிக்கும் பொது அவரும் மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இவர்கள் இருவரும் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தூக்க வந்த பிரியதர்ஷினி மற்றும் குமாரையும் மின்சாரம் தாக்கியதில் தலை உள்ளிட்ட பகுதி கருகி தூக்கி வீசப்பட்டனர்.

    இதனைப் பார்த்து ஓடி வந்த பக்கத்து வீட்டு சேர்ந்த காந்தலட்சுமி என்பவரும் மின்சாரம் தாக்கி காயமடைந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடி யாக போலீசாருக்கும் மின்சார துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    மின்சாரத் துறையினர் இந்த கிராமத்திற்கு வரும் மின்சாரத்தை துண்டித்து ஊருக்குள் வந்தனர். மின்சாரம் தாக்கியதில் காயம் அடைந்த 4 பேரும் அங்கிருந்த வாகனத்தில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காந்த லட்சுமி மட்டும் லேசான காயத்துடன் சிகிச்சை பெறுகிறார்.

    தனம்,பிரியதர்ஷினி, குமாரி ஆகிய 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேதராப்பட்டு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×