search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    100 ஆண்டு கால  மயான பிரச்சினைக்கு தீர்வு
    X

      செந்தில்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    100 ஆண்டு கால மயான பிரச்சினைக்கு தீர்வு

    • 4 கிராம மக்கள் மகிழ்ச்சி
    • புதுச்சேரி – தமிழக கிராமத்தினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வந்தது.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதிக் குட்பட்ட கொரவள்ளி மேடு, பள்ளக் கொரவள்ளிமேடு, சுள்ளியாங் குப்பம், மதிகிருஷ்ணாபுரம் கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களுக்கு மயான வசதி இல்லாததால், அங்கு இறப்பவர்களின் உடல்களை சுமார் 5 கி.மீ தூரம் உள்ள தென்பெண்ணையாற்று கரையில் அடக்கம் செய்து வருகின்றனர்.

    தூரம் ஒரு பக்கம் இருந்தாலும், பல நேரங்களில் இறுதி ஊர்வலத்தின் போது, புதுச்சேரி – தமிழக கிராமத்தினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வந்தது.

    இது குறித்து பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால், கொரவள்ளிமேடு, பள்ளக்கொரவள்ளிமேடு, சுள்ளியாங்குப்பம், மதிக்கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் மயான வசதி வேண்டி பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து போராடி வந்தனர். கடந்த காங்., ஆட்சிகளில், பாகூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர்.

    ஆனாலும், மயான வசதி தொடர்பான பணிகள் இடியாப்ப சிக்கலில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது செந்தில்குமார் எம்.எல்.ஏ. முயற்சியால், முள்ளோடை துணை மின் நிலையம் அருகே உள்ள இடத்தில் மேற்கண்ட கிராமங்க ளுக்கு மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக மகத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.34.95 லட்சத்திற்கு அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், பாகூர் தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் கலந்து கொண்டு, மயானம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்,

    புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், உதவிப் பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 100 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்த மகிழ்ச்சியில் 4 கிராமங்களை சேர்ந்தபொது மக்கள் திரளாக கலந்து கொண்டு எம்.எல்.ஏவிற்கு நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×